இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தனது ஏடிஎம் சேவையில் அங்கீகரிக்கப்படாத பண பரிவர்த்தனையிலிருந்து தனது வாடிக்கையாளர்களை பாதுகாக்க உதவும் வகையில் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்த உள்ளது.
சரி அப்படி என்ன செயல்முறை? எப்படி முறைகேடுகளிலிருந்து வாடிக்கையாளர்கள் தப்ப முடியும் என்று கேட்கிறீர்களா? வாருங்கள் அதை பற்றித்தான் இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, அண்மையில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் பல மாற்றங்களையும் செய்து வருகிறது.
ஓடிபி முறை
அந்த வகையில் வரும் ஜனவரி 1 முதல் ஏடிஎம்மிலிருந்து பணம் எடுக்கும் போது, தவறான நபர்கள் யாரும் முறைகேட்டில் ஈடுபடாதவாறு, ஒடிபி முறையை கொண்டு வர உள்ளது. சரி அதை எப்படி செயல்படுத்த முடியும்? இந்த ஓடிபி முறையானது ஜனவரி 1, 2020ல் இருந்து நடைமுறையில் இருக்கும் என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது. இந்த திட்டமானது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகளில் இருந்து பாதுகாப்பு
இந்த ஒடிபி திட்டமானது எஸ்பிஐயின் அனைத்து ஏடிஎம்களிலும் செயல்பாட்டில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நடைமுறையானது அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகளில் இருந்து உங்களைப் பாதுக்காக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஓடிபி முறையிலான பணம் பெறும் வசதியானது 10,000 ரூபாய்க்கு மேல் பணம் பெறும் போது பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்
வங்கியில் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும். இந்த ஓடிபி மூலம் பண பரிவர்த்தனைக்கு பயனரை அங்கீகரிக்கும். எனினும் தற்போதைய ஏடிஎம் செயல்பாட்டில் இருந்து எந்த மாற்றமும் செய்யபப்டவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதில் உள்ள மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் எஸ்பிஐ தவிர மற்ற வங்கிகளில் நீங்கள் இந்த பரிவர்த்தனையை செய்யும் போது, இந்த சலுகையானது பொருந்ததாது என்றும் கூறப்படுகிறது.
ஏடிஎம்மில் திரையில் ஓடிபி
நீங்கள் வழக்கம் போல் ஏடிஎம்மில் நீங்கள் பெற விரும்பும் தொகையை பதிவு செய்த பின், ஏடிஎம் திரையில் ஓடிபி என்ற ஆப்சனை கேட்கும் போது, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். இதை திரையில் கொடுத்த பின்னரே உங்களது பரிவர்த்தனை முடிவடையும். இந்த முறையானது சற்றே வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்றும் கருதப்படுகிறது.
மேக்னடிக் ஸ்ட்ரிப் கார்டுகளை மாற்றிடுங்கள்
பாதுகாப்பு கருதி கடந்த சில மாதங்களாகவே எஸ்பிஐ ஏடிஎம் கார்டு மேக்னடிக் ஸ்ட்ரிப் கொண்ட கார்டுகளாக இருந்தால் அது டிசம்பர் 31 வரையில் தான் அந்த கார்டுகள் செல்லும். இந்த வகையான மேக்னடிக் ஸ்ட்ரிப் கொண்ட ஏடிஎம் கார்டுகள் எளிதாக ஹேக் செய்ய முடியும் என்பதால், பாதுகாப்பு கருதி எஸ்பிஐ இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாகவும் தொடந்து கூறி வருகிறது.
பாதுகாப்பான இஎம்வி சிப் கார்டு
உங்களது பழைய மேக்னடிக் ஸ்ட்ரிப் கார்டை தவிர்த்து, கூடுதல் பாதுகாப்பிற்காக இஎம்வி சிப் பொருத்தப்பட்ட கார்டுகளை பெற்று பயன் பெறுங்கள். மேலும் எஸ்பிஐ வங்கியின் இஎம்வி சிப் இல்லாத பழைய டெபிட் கார்டுகளை டிசம்பர் 31ஆம் தேதியோடு முடக்கவுள்ளதாகவும், ஜனவரி 1 லிருந்து புதிய ஏடிஎம் கார்டுகள் தான் செல்லும் என்றும் அறிவித்திருந்தது.
திருட்டு அபாயம்
ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது மறைமுகமாக கேமரா பொருத்தி பின்கள் மற்றும் கார்டின் விவரங்களை அறிந்து எளிதாக பணம் திருடப்படுகிறது. மேலும் ஸ்கிம்மர்கள் மூலமாகவும் உங்களது தகவல்கள் திருடப்படுகிறது என்பதால்;, தொடர்ச்சியாக பல மோசடி சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆக இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்கத் தான் எஸ்பிஐ முதலில் இஎம்வி கார்டுகளையும், தற்போது ஓடிபி முறையும் செயல்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications