இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-வின் யோனோ செயலி சிஸ்டம் அவுடேஜ் காரணமாக முடங்கியது. இதனால் பல கோடி எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பேங்கிங் சேவையைப் பயன்படுத்த முடியாமல் தவித்தனர்.
இதேபோன்ற நிகழ்வு நவம்பர் 21ஆம் தேதி ஹெச்டிஎப்சி வங்கியும் எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்
யோனோ சேவை முடங்கியதன் எதிரொலியாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் வாடிக்கையாளர்கள் சமுக வலைத்தளத்தில் சேவை முடங்கியதை பற்றிப் பல பதிவுகளைச் செய்தனர்.
இன்று காலை யோனோ எஸ்பிஐ வங்கி செயலியைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக M005 என்ற Error செய்தியைப் பெற்றுள்ளனர்.
மாற்று வழிகள்
மேலும் வாடிக்கையாளர்களுக்கு யோனோ எஸ்பிஐ மொபைல் செயலி சிஸ்டம் அவுடேஜ் காரணமாக முடங்கியுள்ளது. இச்சேவை தொடர்ந்து மக்களுக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கையா எடுத்துவருவாதாகவும் தெரிவித்து, வாடிக்கையாளர்களிடம் இந்த நிலைக்கு மன்னிப்பும் கேட்டுள்ளது.
49 கோடி வாடிக்கையாளர்கள்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சுமார் 49 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு தினமும் தனது டிஜிட்டல் சேவைகள் மூலம் 4 லட்ச பரிமாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது.
மேலும் இவ்வங்கியின் 55 சதவீத வங்கி பரிமாற்றங்கள் டிஜிட்டல் நிதியியல் சேவை வாயிலாக எதிர்கொண்டு வரும் நிலையில் யோனோ எஸ்பிஐ ஆப் வாயிலாகத் தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமான பணப் பரிமாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது.
ஹெச்டிஎப்சி வங்கி
ஹெச்டிஎப்சி வங்கியின் டிஜிட்டல் சேவைகள் நவம்பர் 21 மாலை முதல் நவம்பர் 22 காலை வரை சுமார் 12 மணிநேரம் முழுமையாக முடங்கியது. இதனால் ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதை யாரும் மறந்திருக்க முடியாது.
ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு
இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஹெச்டிஎப்சி வங்கியின் டிஜிட்டல் சேவை தடைப்பட்டதற்கான காரணத்தைக் கேட்ட நிலையில், தற்போது ஹெச்டிஎப்சி வங்கி புதிய கிரெடிட் கார்டுகளைக் கொடுக்கத் தற்காலிக தடையை வித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் டிஜிட்டல் 2.0 திட்டத்தில் இருக்கும் புதிய டிஜிட்டல் திட்டங்களை அறிமுகம் செய்வதை நிறுத்தவும், ஐடி சேவைகள் மூலம் வர்த்தகம் ஈட்டும் இதர முயற்சிகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications