இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது டிஜிட்டல் சேவைகளின் எண்ணிக்கையும், தரத்தையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அதிகளவில் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் டிஜிட்டல் சேவைகளை முடக்கினால் வாடிக்கையாளர்கள் அதிகளவிலான பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என்பதை உணர்ந்து மெயின்டனன்ஸ் பணிகளைச் செய்வதற்காக முன் அறிவிப்புடன் எஸ்பிஐ தனது டிஜிட்டல் சேவை தளத்தை முடக்க உள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மெயின்டனன்ஸ் பணிகளைச் செய்வதற்காகத் தனது வாடிக்கையாளர்களிடம் டிவிட்டர் வாயிலாக டிசம்பர் 11ஆம் தேதி அதாவது நாளை எஸ்பிஐ இண்டர்நெட் மற்றும் டிஜிட்டல் வங்கி சேவைகள் இயங்காது என அறிவித்துள்ளது. இதன் மூலம் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வங்கி பணிகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
300 நிமிடங்கள்
எஸ்பிஐ வங்கி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள டிவீட்டின் படி டிசம்பர் 11ஆம் தேதி 23.30 முதல் 12ஆம் தேதி 4.30 வரையில் சுமார் 300 நிமிடங்கள் எஸ்பிஐ வங்கியின் இண்டர்நெட் பேங்கிங், யூனோ, யூனோ லைட், யூபிஐ போன்ற டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்த முடியாது என அறிவித்துள்ளது.
மெயின்டனன்ஸ் பணிகள்
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான வங்கியில் அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த மெயின்டனன்ஸ் பணிகளைச் செய்ய உள்ளோம், வாடிக்கையாளர்களைப் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளது எஸ்பிஐ வங்கி.
எஸ்பிஐ பங்கு மதிப்பு
இதேபோல் அக்டோபர் 2ஆம் தேதி 2 நாட்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தில் மெயின்டனன்ஸ் பணிகளுக்காக இண்டர்நெட் மற்றும் டிஜிட்டல் சேவைகளை முடக்கியது குறிப்பிடத்தக்கது. இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் எஸ்பிஐ பங்கு மதிப்பு 0.64 சதவீதம் வரையில் சரிந்து 485.45 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications