இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்படும் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் மத்தியிலான வர்த்தகம் விற்பனை ஒப்பந்தம் அடுத்தடுத்து பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த வாரம் இந்த ஒப்பந்தத்திற்குத் தேவையான ஒப்புதல்களைக் கட்டுப்பாட்டு அமைப்புகள் கொடுக்கலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்து இருந்த நிலையில் தற்போது சுப்ரீம் கோர்ட் ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப் ஒப்பந்தத்திற்கு, கட்டுப்பாட்டு அமைப்புகள் ஒப்புதல் அளிக்கத் தற்காலிக தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவின் மூலம் 3.4 பில்லியன் டாலர் மதிப்பிலான ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப் ஒப்பந்தம் மீண்டும் தடைபெற்று நிற்கிறது. இது அமேசான் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
தற்காலிக தடை விதிப்பு
டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த வாரம் ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப்-க்குச் சாதகமாக அமைந்த நிலையில், அமெரிக்க ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. இந்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம் அமேசானுக்குச் சாதகமான தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.
தற்காலிக தடை விதிப்பு
இன்று வழங்கிய தீர்ப்பில், டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்துவிட்டுச் செபி, CCI, பங்குச்சந்தை போன்ற கட்டுப்பாட்டு ஆணையங்கள் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கத் தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் அமேசான் நிறுவனத்தின் மனுவிற்குப் பதில் அளிக்கும் வகையில் பியூச்சர் ரீடைல் நிறுவனத்திடம் இருந்து எழுத்துப் பூர்வமான பதிலைக் கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமேசான் மனு
மேலும் அமேசான் சமர்ப்பித்துள்ள மனு மற்றும் அதன் மீதான பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் பதில் ஆகியவற்றை ஆய்வு செய்யும் அடுத்த விசாரணை 5 வாரங்களுக்குப் பின் நடத்தப்படும் என நீதிபதி ரோஹின்டன் எப்.நரிமன் தலைமையிலான இருவர் அடங்கிய நீதிபதி குழு விசாரிக்க உள்ளது.
சிங்கப்பூர் நடுவர் அமைப்பு
கடந்த வருடம் நடைபெற்ற ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப் ஒப்பந்தத்திற்கு எதிராக அமேசான் சிங்கப்பூர் நடுவர் அமைப்பில் தொடுத்த வழக்கிலும் அமேசானுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் முதல் முறையாக இவ்வழக்கு சென்றுள்ள நிலையிலும் அமேசானுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இதன் எதிரொலியாக இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆன முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மதிப்பு 3.2 சதவீதம் சரிந்து ஒரு பங்கு விலை 2007 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் இன்றைய வர்த்தகத்தில் தனது ஆஸ்தான அளவீடான 2000 ரூபாயில் இருந்து 1995 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications