ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை சுப்ரீம் கோர்ட் வழிக்காட்டுதலின் படி பங்குச்சந்தை கட்டிப்பாட்டு ஆணையமான செபி அமைப்பு, அதானி குழுமம் செய்த 24 பரிமாற்றங்களில் 22 பரிமாற்றங்களின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளதாகவும், 2 பரிமாற்றங்களின் விசாரணை இடையில் இருப்பதாக தெரிவித்து வெள்ளிக்கிழமை அறிக்கை சமர்ப்பித்தது.
செபியின் விசாரணை முடிவு அறிக்கையை இன்று சுப்ரீம் கோர்ட் விசாரிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது விசாரணையை ஒத்திவைத்துள்ளதாக தெரிகிறது. மேலும் சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு குழு செபியின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்ய துவங்கியுள்ளதாக தெரிகிறது.

இந்திய தலைமை நீதிபதி தலைமையிலான பென்ச், இந்திய சட்டம் 370 பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கும் பணியில் உள்ளதால், அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட் செபிக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதி அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தின் விசாரணை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க கூறியிருந்த நிலையில், செபி 15 நாள் அவகாசம் கேட்டு மனு கொடுத்தது. இந்த நிலையில் அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தின் விசாரணை ஆகஸ்ட் 29 ஆம் தேதி என தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி அதானி குழுமம் செய்த 24 பரிமாற்றத்தில் 22 பரிமாற்றங்களின விசாரணையை முடித்து அறிக்கை சமர்பித்தது.
செபி தனது ஆய்வறிக்கையின் முடிவுகளை இதுவரையில் பொது வெளியில் வெளியிடவில்லை. ஆனால் செபி அதானி குழுமம் செய்த விதிமீறல்களை கண்டுப்பிடித்துள்ளதாகவும், குறிப்பாக அளவுக்கு அதிகமாக வெளிநாட்டு நிறுவன பெயரில் வைக்கப்பட்ட பங்கு விபரங்களை மறைத்தது குறித்தும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக 2 அதிகாரிகள் கூறியதை ரெயூட்டர்ஸ் வெளியிட்டது.
இந்த நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும், சக போட்டி நிறுவனங்களும் அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தின் விசாரணை இன்று முக்கிய கட்டத்தை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
அதானி - ஹிண்டன்பர்க் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில் அதானி குழும பங்குகளின் நிலவரம் என்ன?
- அதானி எண்டர்பிரைசஸ் - 1.34 சதவீதம் உயர்வு
- அதானி போர்ட்ஸ் - 1.72 சதவீதம் உயர்வு
- அதானி பவர் - 2.21 சதவீதம் உயர்வு
- அதானி எனர்ஜி சொல்யூஷன் - 0.69 சதவீதம் சரிவு (முன்பு இதன் பெயர் அதானி டிரான்ஸ்மிஷன்)
- அதானி கிரீன் எனர்ஜி - 0.60 சதவீதம் சரிவு
- அதானி டோட்டல் கேஸ் - 0.80 சதவீதம் உயர்வு
- அதானி வில்மார் - 0.03 சதவீதம் சரிவு
- ஏசிசி லிமிடெட் - 0.06 சதவீதம் உயர்வு
- அம்புஜா சிமெண்ட்ஸ் - 0.43 சதவீதம் உயர்வு
- NDTV - 0.30 சதவீதம் உயர்வு
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications