சென்னை: ரயிலில் பயணம் செய்பவர்களை குறிவைத்து போலிப் பொருட்கள் விற்பனை செய்வது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில், X தளத்தில் @Sankott என்ற பயனர் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், ரயிலில் பயணிகளுக்கு போலி பவர் பேங்க் விற்பனை செய்யும் ஒரு நபர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
ரயிலில் போலியான பவர் பேங்குகளை விற்பனை செய்த நபர் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர், சாம்சங் (samsung) மற்றும் விவோ ( vivo) மொபைல்களுக்கான பவர் பேங்குகளை விற்பனை செய்கிறார். அதன் பிறகு, அவர் விற்பனை செய்த அனைத்தும் போலியானவை என்று மக்கள் கண்டறிந்தனர். ரயிலில் ஒரு பயணியிடம், பவர் பேங்குகளை காண்பித்துக் கொண்டிருக்கும் பொழுது, அந்த பயணி பவர் பேங்க் சரியாக வேலை செய்யுமா என்று சோதித்து பார்ப்பதற்கு ஒரு பவர் பேங்கை பயன்படுத்தி பார்த்துள்ளார்.

அவ்வாறு பயன்படுத்திய போது அந்த பவர் பேங்க் சரியாக வேலை செய்யவில்லை என்று தெரிய வந்தது. உடனே அந்தப் பயணி பவர் பேங்கை ஆய்வு செய்தபோது, அது மண்ணால் நிரப்பப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். அப்போது அந்த நபருக்கும் விற்பனையாளருக்கும் மோதல் ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். sankott எனும் நபர் இந்த வாக்குவாதத்தை வீடியோ எடுத்து X தளத்தில் ஜூன் 18 அன்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ 3 லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்களைக் கடந்து ஷேர்களையும், 331.1K லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவிற்கு பலதரப்பட்ட மக்கள் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எனக்கும் இது போன்ற ஒரு நிகழ்வு ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. அவர்கள் பவர் பேங்க்-இன் உள்ளே மண் மற்றும் கல் ஆகியவற்றை வைத்து மக்களை முட்டாள்களாக்குகிறார்கள் என்று பாதிக்கப்பட்ட ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
மற்றொரு X பயனர், " இந்த நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது, ஆனால் உயர் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை" என்று கூறியுள்ளார்.
இது போன்று விற்பனை செய்பவர்கள் ரயிலுக்குள் எவ்வாறு நுழைகிறார்கள் என்று இதுவரை எனக்கு தெரியவில்லை. அவர்களிடம் ரயில் டிக்கெட்டை கேட்கவோ அவ்வாறு டிக்கெட் இல்லை என்றால் ரயிலில் இருந்து அவர்களை வெளியேற்றவோ யாருக்கும் தைரியம் இல்லை" என்று மற்றொரு X பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
திருடுவதற்கு ஒரு புதிய முறையை கண்டறிந்து உள்ளார்கள் இது போன்ற நிகழ்வுகளை தடுப்பது மிகவும் அவசியம் என்று மற்றொரு X பயனாளர் கமெண்ட் செய்துள்ளார்.
அதனால் பேருந்திலோ ரயிலிலோ நீங்கள் பயணிக்கும் பொழுது வெளி ஆட்கள் விற்பனை செய்யும் பொருட்களை வாங்க வேண்டாம். அவ்வாறு வாங்குவதாக இருந்தால் அந்தப் பொருளின் தரத்தை ஆராய்ந்து வாங்குங்கள். பின் நீங்கள் தரும் பணத்திற்கு அந்த பொருள் தகுதியானதா என்று யோசித்து பின்னர் வாங்குங்கள்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications