இன்றைய உலகில் ஸ்மார்ட்போன் என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல; அது நமது அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது. வங்கிக் கணக்குகள் முதல் தனிப்பட்ட புகைப்படங்கள் வரை, விலைமதிப்பற்ற தகவல்கள் அனைத்தும் இந்த சிறிய சாதனத்தில் அடங்கியுள்ளன. நாளுக்கு நாள் டிஜிட்டல் பரிவர்த்தனை பெருகி வரும் நிலையில் ஆன்லைன் மூலம் பண மோசடியும் பெருகி வருகிறது. பண பரிவர்த்தனை டிஜிட்டல் மயமாவதால் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் பயன்பாடு எளிதாகி இருக்கும் நிலையில், ஆன்லைனில் நடைபெறும் சைபர் மோசடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் ஒருபுறம் பெருகி வருகிறது.இந்த சைபர் மோசடிகளால் நன்கு படித்து, விவரம் தெரிந்தவர்கள் கூட ஏமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் தற்போது, மோசடிக்காரர்கள் புதிய வழியை கண்டுபிடித்து மக்களை ஏமாற்ற தொடங்கியுள்ளனர். உங்க வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்யும் புதிய உத்திகளில் ஒன்றுதான் 'call merging scam'. இதன் மூலம் முதலில் தெரியாத நபர் ஒருவர், உங்கள் எண்ணை உங்கள் நண்பரிடமிருந்து பெற்றதாகக் கூறி அழைப்பார். பின்னர் மோசடி செய்பவர், உங்கள் நண்பரையும் call merging மூலம் இணைக்கிறேன் என்று கூறி அழைப்பை ஒருங்கிணைக்கிறார்.

அழைப்பு இணைக்கப்பட்டவுடன், சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், வங்கியில் இருந்து ஒரு OTP வரும் அதை கூறுங்கள் என்று கூறி பயனர் மூலமாகவே OTP எண்ணை பகிரவைக்கிறார்கள். OTP-பகிரப்பட்டவுடன், பயனரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடி செய்துவிட்டு அழைப்பை துண்டித்துவிடுகிறார்கள். இதுதொடர்பாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி, இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) எச்சரிக்கை விடுத்துள்ளது.
NPCI தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, மோசடி செய்பவர்கள் உங்களை ஏமாற்றி ஓடிபிகளை தெரிந்துகொள்ள கால் மெர்ஜிங் முறையை பயன்படுத்துகிறார்கள். அதில் ஏமாறாதீர்கள்! விழிப்புடன் இருங்கள் மற்றும் உங்கள் பணத்தைப் பாதுகாக்கவும்." எனத் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?: இந்த மோசடிக்கு ஆளாகாமல் இருக்க பயனர்களுக்கு உதவும் வகையில் UPI பாதுகாப்பு உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்துள்ளது: அதில், அறிமுகமில்லாத யாராவது அழைப்பு இணைப்பைக் கோரினால் எச்சரிக்கையாக இருங்கள். அழைப்பை இணைக்க வேண்டாம். யாராவது, அழைப்பாளர் வங்கியிலிருந்தோ அல்லது தெரிந்த தொடர்பிலிருந்தோ வந்ததாகக் கூறினால், அவர்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவும். நீங்கள் தொடங்காத வங்கி பரிவர்த்தனைக்கு ஓடிபி வந்தால், உடனடியாக 1930 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் சந்தேகத்திற்கிடமான ஓடிபிகளைப் புகார் செய்யவும்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications