பள்ளிகள் மூடப்பட்டதால் 400 பில்லியன் டாலர் இழப்பு.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் தற்போது கல்வியை ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆன்லைன் கல்வி மாணவ மாணவிகளுக்கு முழுமையான கல்வியைக் கொண்டு சேர்க்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் அனைவரின் பதிலாக உள்ளது.

 

இந்நிலையில் உலக வங்கியின் ஒரு ஆய்வு நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

ஆம், உலக வங்கி செய்த ஆய்வில் இந்தியாவில் தற்போது பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் இந்தியா சுமாப் 400 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை இழக்கும். இதுவே தென் ஆசியப் பகுதியைக் கணக்கிட்டால் 622 பில்லியன் டாலர் அளவில் இருந்து அதிகப்படியாக 880 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை இழக்க நேரிடும் என உலக வங்கி செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

Consumer Price Index செப்டம்பர் 2020 மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம்!

கல்வி

கல்வி

கொரோனா காரணமாகப் பிற நாடுகளைக் காட்டிலும் தென் ஆசிய நாடுகள் அதிகளவிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டு வரலாறு காணாத வகையில் 2020ஆம் ஆண்டில் ரெசிஷன்-ஐ எதிர்கொண்டு வருகிறது. திரும்பும் இடமெல்லாம் பணிநீக்கம், சம்பள குறைப்பு, நிதிப் பற்றாக்குறை, நிறுவனங்கள் திவாலாகும் நிலை, வங்கிகளில் அதீத வராக்கடன் என அடுக்கிக்கொண்டு போகும் அளவிற்குத் தென் ஆசிய நாடுகளில் தற்போது பிரச்சனைகள் அதிகமாக உள்ளது.

கல்வி

கல்வி

இதேவேளையில் கொரோனா பாதிப்பிற்காகச் சுமார் 391 மில்லியன் மாணவ மாணவிகள், பள்ளிகள் மூடப்பட்டதால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால் பிற நாடுகளில் காட்டிலும் தென் ஆசிய நாடுகளில் கல்வியில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும்

இந்தப் பிரச்சனையில் இருந்து மீண்டு வர பள்ளி மற்றும் அரசு நிர்வாகம் போதிய நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், மாணவ மாணவிகளுக்கு முழுமையான கல்வியைக் கொண்டு சேர்க்க முடியவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

பாதிப்பு
 

பாதிப்பு

தென் ஆசிய நாடுகளில் பள்ளிகள் மார்ச் மாதம் மூடப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட அரை வருடம் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் learning-adjusted years of schooling (LAYS)அளவீடு 0.5 புள்ளிகள் குறைந்து. தற்போது அளவீடான 6.5 LAYS அளவீடு, 6.0 LAYS அளவீடாகக் குறைந்துள்ளது.

LAYS அளவீடு என்பது கல்வி கிடைத்தலும், அதைப் பயன்படுத்தலுக்குமான அளவீடு. இதை உலக வங்கி அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதில் கல்வியின் தரம் (Quality) மற்றும் காலம் (Quantity - Years of Schooling) அளவீடும் ஆய்வு செய்யப்படுகிறது.

4,400 டாலர்

4,400 டாலர்

இந்தப் பாதிப்பால் 6 மாதம் பள்ளிக் கல்வியை இழந்த மாணவர்கள் வேலைக்கும் வரும் போதும் அவர்களின் வருமானத்தில் 4,400 டாலர் குறையும் என்றும், இது தென் ஆசிய நாடுகளின் சராசரி வாழ்நாள் வருமானத்தில் 5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது என உலக வங்கி தெரிவித்துள்ளது.

880 பில்லியன் டாலர்

880 பில்லியன் டாலர்

இதன் மூலம் தென் ஆசிய நாடுகள் தனது மக்கள் மூலம் இந்தக் கல்வி பாதிப்பால் சுமார் 622 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை இழக்க நேரிடும், கல்வி இடைவெளி மிகவும் மோசமாகவும் பாதிப்பு அதிகமாக இருக்கக் கூடியதாகவும் இருந்தால் இதன் அளவீடு 880 பில்லியன் டாலர் அளவில் உயர வாய்ப்புள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியா

இந்தியா

தென் ஆசிய நாடுகளில் அதிகப் பள்ளி, கல்வி நிறுவனங்கள் இருக்கும் நிலையில் இந்தக் கல்வி இடைவெளி மூலம் இந்தியா சுமார் 400 பில்லியன் டாலர் அளவில் வருமானத்தை இழக்க நேரிடும்.

உலக வங்கியின் இந்த ஆய்வு மாணவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாகக் கல்லூரி இறுதி ஆண்டுப் படிக்கும் மாணவர்களின் நிலை என்ன..? என்பது பற்றிக் கமெண்ட் பகுதியில் கருத்துப் பதிவு செய்யுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

School closure amid corona: It cost over $400 billion to India

School closure amid corona: It cost over $400 billion to India
Story first published: Monday, October 12, 2020, 19:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X