சிலர் தங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சிறிய தொழிலை தொடங்கி அதன் மூலம் வளர்ந்து பெரிய சாதனையைப் படைத்த கதைகள் பல உள்ளன. அதேபோன்ற ஒரு கதையை தான் இன்றும் நாம் பார்க்க உள்ளோம். தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம் சோமன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் டாக்டர் கந்தசாமி சரவணன். இவர் முருங்கை மரத்தை வைத்தே லட்சங்களில் சம்பாதித்து வருகிறார். நம் நாட்டில் பலரது வீட்டின் கொல்லைப்புறத்திலும் முருங்கை மரங்கள் இருக்கும். ஆம்.. அதே முருங்கை மரத்தை வைத்து தான் இவரும் லட்சங்களில் சம்பாதித்து வருகிறார். அவர் அப்படி என்ன செய்கிறார்? இதன் மூலம் அவருக்கு எப்படி இவ்வளவு லாபம் கிடைக்கிறது? என்பதைப் பார்ப்போம்.
கந்தசாமி சரவணன் தன்னுடைய 4 ஏக்கர் நிலத்தில் முருங்கை மரங்களை வைத்துள்ளார். பல ஆண்டுகளாக அவருடைய குடும்பம் முருங்கைக்காய் அறுவடைக்காக முருங்கை பயிரிட்டு வருகிறது. ஆனாலும் சந்தை விலை காரணமாக பெரிய அளவில் லாபம் கிடைக்காமல் இருந்துள்ளது.

முருங்கைக்காய்க்கு விவசாயிகள் ஒரு கிலோவுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை பெறுகின்றனர். ஆனால் அதிக உற்பத்தியின் போது கிலோவுக்கு 5 ரூபாய் வரை விலை குறைகிறது. இதன் காரணமாக முருங்கை விவசாயம் லாபமற்றதாக மாறி வருவதை கந்தசாமி சரவணன் கவனித்துள்ளார். அதே சமயம் முருங்கை இலைகளுக்கு சர்வதேச சந்தையில் அதிக தேவை இருப்பதையும் கவனித்துள்ளார். எனவே முருங்கை இலை விவசாயத்திற்கு மாற முடிவு செய்துள்ளார் கந்தசாமி சரவணன்.
வெரும் முருங்கை இலைகளை கொண்டு அவற்றை முருங்கைப் பொடி, முருங்க இலை சூப் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக தயார் செய்துள்ளார். இதன் மூலம் அவற்றை கிலோவுக்கு ரூ.80-க்கு மேல் விற்கலாம். இவர் இதற்கு முன்பு சாயில் சயின்டிஸ்ட்டாக இருந்துள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் பல வளைகுடா நாடுகளில் இருந்துள்ளார் சரவணன்.
டாக்டர் சரவணன் அறிவியல் மற்றும் வேளாண் வேதியலில் 20 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். இயற்கையுடன் அவருடைய ஆழமான வேரூன்றிய தொடர்பு அவரது குடும்பத்தின் விவசாய பின்னணியுடன் இணைந்து ஒரு செழிப்பான வணிகத்தை உருவாக்க உதவியது.
2017-ஆம் ஆண்டில் அவர் தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் தனது மதிப்புமிக்க பதவியான சாயல் சயின்டிஸ்ட் பதவியை 7 ஆண்டு காலம் பணியாற்றிய பிறகு ராஜினாமா செய்தார். சரவணனின் தந்தை ஆரம்பத்தில் அவரது விருப்பத்தை எதிர்த்துள்ளார். ஆனால் அவரது அசைக்க முடியாத உறுதி அவரை முன்னோக்கி கொண்டு சென்றது.
சிலர் முதலீடு இருக்கக் கூடாது. ஆனால் லாபம் பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதேபோல பூஜ்ஜிய பட்ஜெட்டில் இயற்கை விவசாய கொள்கையைத் தான் டாக்டர் சரவணன் பின்பற்றியுள்ளார். மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் விவசாய வருமானத்தை உயர்த்தும் நிலையான விவசாய முறைகளையும் மேம்படுத்துவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
முருங்கை விவசாயத்தில் 15 அடி இடைவெளியில் மரங்கள் நடப்படும். அதே சமயம் அதன் இலை சாகுபடியில் மரக்கன்றுகள் நெருக்கமாக நடப்படுகின்றன. மரம் இரண்டடி உயரத்திற்கு வந்ததும் இலைகள் வெட்டப்படுகின்றன. மேலும் 50 முதல் 60 நாட்கள் இடைவெளியில் ஆறு முறை வர இலைகளை அறுவடை செய்யலாம் என்று கூறுகிறார் இந்த சாதனை மனிதர்.
டாக்டர் சரவணன் முருங்கை இலைகளை வளர்க்க உழவு சாகுபடியைப் பயன்படுத்துகிறார். ஆட்டின் கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் முறையில் மரங்களை வளர்க்கிறார். மேலும் பயிர்கள் வீணாகாமல் வளர சொட்டு நீர் பாசனத்தை அமைத்துள்ளார். உற்பத்தியை அதிகரிக்கவும், களை வளர்ச்சியை அடக்கவும் புதிய நுட்பங்களை பயன்படுத்துகிறார்.
முருங்கை இலைகளை நிழலில் உலர்த்துவதன் மூலம், தூள், காப்ஸ்யூல்கள் மற்றும் சூப்கள் போன்ற பலதரப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்கிறார். இதன் மூலம் மாதந்தோறும் ரூ.40,000 வரை நிகர லாபம் பெறுகிறார். ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்வதன் மூலம், விவசாயிகள் தங்களின் இலைகளை விற்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை பெறலாம். மேலும் அவற்றை மதிப்புக் கூட்டி விற்பனை செய்தால், இரண்டு மடங்கு லாபம் ஈட்ட ரூ. 2.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறுகிறார் இந்த விவசாயி.
முருங்கை இலையை வைத்து அவற்றை லாபகரமான தொழிலாக மாற்ற முடியும் என்பதை சாதித்துக் காட்டியுள்ளார் சரவணன்.
More From GoodReturns

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications