வல்லரசு நாடுகளில் இருப்பது போன்ற சிறந்த வாகன உலோகச்கிம்பு (scrappage) கொள்கை இந்தியாவில் கொண்டு வரப்பட்டால் சுமார் 43,000 கோடி ரூபாய் அளவிலான புதிய வர்த்தகத் துறை உருவாக்க முடியும் என ஆட்டோமொபைல் மற்றும் பொருளாதாரத் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இப்புதிய கொள்கையின் மூலம் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவது மட்டும் அல்லாமல் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உந்து சக்தியாகவும் இது விளங்கும் என வல்லுனர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.
ஆட்டோமொபைல் துறை
இந்தியாவில் வர்த்தகம் இல்லாமலும், இருக்கும் கொஞ்ச வர்த்தகத்தையும் வெளிநாட்டு நிறுவனங்கள் எடுத்து கொண்டு இந்திய நிறுவனங்களை மோசமான வர்த்தக நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஆட்டோமொபைல் துறைக்கு வாகன உலோகச்கிம்பு (scrappage) கொள்கை புதிய வர்த்தக வாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கித் தரும்.
நித்தின் கட்கரி
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், வாகன உலோகச்கிம்பு (scrappage) கொள்கை ஒப்புதலுக்காக இந்த மாதத்தில் நாடாளுமன்றத்தின் பார்வைக்குச் சமர்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இது நடைமுறைக்கு வந்தால் கிட்டத்தட்ட 6 பில்லியன் டாலர் அதாவது 43,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகச் சந்தை உருவாகும். இதனால் பல லட்சம் பேருக்கு நாடு முழுவதும் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
வாகன உலோகச்கிம்பு கொள்கை
இத்திட்டத்தின் மூலம் பழைய வாகனங்களில் இருக்கும் ஸ்டீல், காப்பர் மற்றும் அலுமினியம் ஆகியவற்றை மறுபடியும் ஆட்டோமொபைல் துறை அல்லது பிற துறை பயன்படுத்த முடியும். இதனால் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் உலோகத்தின் அளவு பெரிய அளவில் குறையும், இதன் எதிரொலியாக நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை கணிசமாகக் குறையும்.
வாகனம்
மேலும் பழைய வாகனங்களைக் காயலான் கடைக்கு அனுப்படுவதன் மூலம் புதிய கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதுமட்டும் அல்லாமல் சாலையில் காற்று மாசுபாடு அதிகளவில் குறையும், அதேபோல் பழைய வாகனங்கள் பொதுவாக அதிக எரிபொருள் எடுத்துக்கொண்டு குறைவான மைலேஜ் மட்டுமே கொடுக்கும், இப்படியிருக்கும் சூழ்நிலையில் பழைய வாகனங்களைக் குறைத்துவிட்டால் பெட்ரோல், டீசல் செலவும் குறையும்.
ஆட்டோமொபைல் துறை
தற்போது மத்திய அரசு வாகன உலோகச்கிம்பு (scrappage) கொள்கையில் முதற்கட்டமாக வர்த்தக வாகனங்களை மட்டுமே கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஆனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வர்த்தக வாகனங்கள் மட்டும் அல்லாமல் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களையும் இத்திட்டத்திற்குள் கொண்டு வர மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகத்தை வலியுறுத்தி வருகிறது.
இதனால் மக்களுக்கு லாபமா..? பதிலை கமெண்ட் ஆக பதிவிடுங்கள்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications