மும்பை: பொதுவாக நம் பணியிடத்தில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை ஊழியர்கள் பார்ப்பதை நிறுவனம் ஏற்றுக் கொள்ளாது. இவ்வாறு சமூக வலைதளங்களை பார்ப்பதால் வேலையில் கவனம் இருக்காது என நிறுவனங்கள் கட்டுப்பாடு விதிக்கும். ஆனால் இங்கே ஒரு நிறுவனம் அது தான் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்வதற்கான தகுதி என கூறியுள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனம் அறிவிப்பு: மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதாக அறிவித்திருக்கிறது இவ்வாறு வரக்கூடிய ஊழியர்களின் தகுதியின் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கு மேல் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துபவராக இருக்க வேண்டும் என தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.

யூடியூப்,இன்ஸ்டாகிராம் பார்க்க வேண்டும்: Monk-E என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் விராஜ் சேத், இவர் தன்னுடைய நிறுவனத்தில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதாக லிங்குடின் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்கள் எப்பொழுதும் யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் வீடியோ ஸ்கிராலிங் செய்து கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
6 மணி நேரத்துக்கும் மேல்: அதிக அளவில் சமூக வலைதளங்களில் வீடியோ ஸ்கிரால் செய்து பார்ப்பவர்களை ஆங்கிலத்தில் doom scrollers என அழைக்கின்றனர். அந்த வகையில் தங்கள் நிறுவனத்தில் doom scrollersகளே வேலைக்கு தேவை என அவர் பதிவு செய்திருக்கிறார். வழக்கமாக பிரவுசிங் செய்து விஷயங்களை தெரிந்து கொள்பவராக இல்லாமல் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கு மேல் இன்ஸ்டாகிராம், யூடியூப்-இல் ஸ்கிராலிங் செய்பவராக இருக்க வேண்டும் அதற்கு ஆதாரமாக ஸ்கிரீன் ஷாட் களையும் பகிர வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

மும்பையில் வேலை: ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும், எக்சல் பயன்படுத்த தெரிந்தவராக இருக்க வேண்டும் என இந்த வேலைக்கான தகுதிகளாக கூறியுள்ளார். இந்த வேலைக்கு வரக்கூடிய நபர்களுக்கு இப்படி ஒரு திறன் இருக்க வேண்டும் என கூறுவதற்கு முக்கிய காரணம் சமூக வலைதளங்களில் இருக்கக்கூடிய கிரியேட்டர்கள் மற்றும் அவர்கள் என்ன மாதிரியான வீடியோக்களை கிரியேட் செய்கிறார்கள் அது எப்படி மக்களிடம் சென்று சேர்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக இவர்களை இவ்வாறு ஸ்கிராலிங் செய்ய வைத்து அந்த தகவல்களை பயன்படுத்திக் கொள்வார்களாம்.
இனி போன் பார்ப்பதும் வேலை தான்: இந்த வேலைக்கு மின்னஞ்சல் அனுப்புபவர்கள் சாட் ஜிபிடி பயன்படுத்தாமல் தங்களை பற்றிய சுய விவர குறிப்புகளை அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிறுவனம் இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங்கில் ஈடுபடுவதால் இப்படி ஒரு வேலைவாய்ப்பை வழங்குகிறது. விராஜ் சேத்தின் இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. பலரும் போனில் வீடியோ பார்ப்பதெல்லாம் வெட்டி வேலை என இருந்த காலம் போய் தற்போது அதுவே ஒரு வேலைவாய்ப்பாக வந்துள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு நபர் இனி என் அம்மா ஏன் போன் பார்த்து நேரத்தை வீணடிக்கிறாய் என கூறினால் இந்த வேலைவாய்ப்பை நான் அவரிடம் காட்டுவேன் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications