ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன் 17 சீரிஸ் போன்களின் விற்பனையை இந்தியாவில் இன்று தொடங்கி இருக்கிறது. இந்த போன்களை டெல்லி மற்றும் மும்பையில் அமைந்திருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனை நிறுவனங்களில் வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஒன்பதாம் தேதி தான் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன் 17 சீரிஸ் போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐ போன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என நான்கு போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இன்று முதல் இந்த போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

டெல்லி மற்றும் மும்பையில் ஐபோன் நேரடி விற்பனை நிலையங்களில் ஐபோன் 17 சீரிஸ் போன்களை வாங்க ஏராளமான வாடிக்கையாளர்கள் நள்ளிரவு முதலே கடைகளின் முன்பு குவிந்து விட்டனர். பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வெளி மாநிலங்களில் இருந்து கூட வாடிக்கையாளர்கள் வருகை தந்திருந்தனர்.
மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ஷோரூமில் அதிகாலை முதலே ஐபோன் ரசிகர்களின் கூட்டம் கலை கட்டியிருந்தது . நள்ளிரவு முதலில் வரிசையில் நிற்க தொடங்கி விட்டதாக வாடிக்கையாளர்கள் பலரும் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையே முதலில் போனை வாங்க வேண்டும் என முண்டி அடித்து கொண்டு பலரும் ஐபோன் விற்பனை நிலையத்திற்குள் நுழைய முயன்றதால் மும்பை ஐபோன் விற்பனை நிலையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது .

வரிசையில் காத்திருந்தவர்கள் ஒருவரை ஒருவர் அடித்து தாக்கி கொண்டனர் . இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தள்ளுமுள்ளாக தொடங்கி பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் நிலைக்கு சென்றது. இதனை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கே நுழைந்து இந்த மோதலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி சமாதானப்படுத்தினர். இதன் காரணமாக அந்த பகுதியில் லேசான பரபரப்பு ஏற்பட்டது.
VIDEO | iPhone 17 series launch: A scuffle broke out among a few people amid the rush outside the Apple Store at BKC Jio Centre, Mumbai, prompting security personnel to intervene.
— Press Trust of India (@PTI_News) September 19, 2025
Large crowds had gathered as people waited eagerly for the iPhone 17 pre-booking.#iPhone17… pic.twitter.com/cskTiCB7yi
அகமதாபாத்தில் இருந்து ஐபோன் வாங்குவதற்காகவே மும்பைக்கு வருகை தந்திருக்கும் மோகன் யாதவ் காலை 5 மணி முதல் தான் வரிசையில் காத்திருப்பதாக கூறியிருக்கிறார் . ஏராளமானவர்கள் வரிசையில் காத்திருந்தபோது ஒரு சிலர் அதைத் தாண்டி கடைக்குள் நுழைய முயன்றதாகவும் அப்போதுதான் மோதல் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்.
பாதுகாப்பு படையினர் காலை முதலே இந்த வரிசையில் காத்திருந்தவர்களை முறையாக நிற்க வைத்து கடைக்குள் அனுமதித்திருக்க வேண்டும் இது பாதுகாப்பு பணியில் இருந்தவர்களால் ஏற்பட்ட தவறுதான் என அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார் .
இந்தியாவில் ஐபோன் இந்தியாவில் ஐபோன் 17 சீரிஸ் போன்களில் ஐபோன் 17 மாடல் 82, 900 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 17 ஏரின் விலை 1,19,900 ரூபாய் என்றும் , ஐபோன் 17 ப்ரோவின் விலை 1,34, 900 ரூபாய் என்றும் ப்ரோ மேக்ஸின் விலை 1,49,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது . ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி உயர உயர இதன் விலையும் உயர்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications