சீல்மேட்டிக் இந்தியா நிறுவனம் பிப்ரவரி 17 அன்று அதன் பொதுப் பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக பொதுப் பங்கு வெளியீடு என்றாலே சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு என்று கூறப்படும். ஏனெனில் நல்ல நல்ல நிறுவனங்களின் பங்கு விலை கூட, குறைவாக கிடைக்கும்.
அந்த வகையில் நாளை சீல்மேட்டிக் நிறுவனம் தனது பொதுப் பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.
விலை எவ்வளவு?
மகாராஷ்டிராவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் இந்த 56.24 கோடி ரூபாய் நிதியினை பங்கு வெளியீட்டிந் மூலம் திரட்ட உள்ளது. இந்த வெளியீட்டில் பங்கு விலையானது 220 - 225 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எவ்வளவு பங்குகள்?
இந்த வெளியீட்டில் நிறுவனம் 18.50 லட்சம் புதிய பங்குகளை விற்பனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வெளியீட்டில் ஒவ்வொரு பங்கின் முக மதிப்பு 10 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதே புரோமோட்டர்கள் வசம் உள்ள 6,49,600 ஈக்விட்டி பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன.
எப்போது பட்டியல்?
பிப்ரவரி 17 ஆன வெள்ளிக்கிழமையன்று தொடங்கவுள்ள இந்த வெளியீடானது பிப்ரவரி 21 அன்று முடிவடையவுள்ளது. இப்பங்குகள் மார்ச் 1, 2023-க்குள் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பங்கானது பி.எஸ்.இ-யில் மட்டும் பட்டியலிடப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லாட் சைஸ்
இந்த பங்கு வெளியீட்டில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு லாட் சைஸ் என்பது 600 பங்குகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக ஒரு வாடிக்கையாளர் முதலீடு செய்ய வேண்டுமெனில் 1,35,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். சில்லறை முதலீட்டாலர்கள் ஒருவர் ஒரு லாட் மட்டுமே வாங்க முடியும் எனலாம். இதே ஹெச்.என்.ஐ முதலீட்டாளர் எனில் அதிகபட்சம் இரண்டு லாட்களை வாங்கிக் கொள்ளலாம் என கூறப்படுகின்றது.
எதற்காக நிதி திரட்டல்?
இந்த வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியானது ஆலை மற்றும் இயந்திரங்கள் வாங்குதல், தயாரிப்பு மேம்பாடு, சந்தைப்படுத்தல், விற்பனைக்கு பிந்தைய ஆதரவு, செயல்பாட்டிற்கு தேவையான மூலதனத்தினை அதிகரித்தல் என வளர்ச்சிக்கு தேவையான பலவற்றிற்கும் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயன் என்ன?
பயந்தர் (மகாராஷ்டிராவை ) தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் சீல்மேட்டிக் இந்தியா இயந்திரம் சம்பந்தமான பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றது. இதன் பொருட்கள் பெரும்பாலும் பல்புகள் மற்றும் பேப்பர், ஆயில் & கேஸ், சுத்திகரிப்பு பொருட்கள், பெட்ரோகெமிக்கல், கெமிக்கல், உரங்கள், மின்சாரம், சுரங்கம், ஏரோஸ்பேஷ், கப்பல், பார்மா நிறுவனங்கள், தொழிற்துறை இயந்திரங்கள் என பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.
எவ்வளவு நாடுகளில் வணிகம்
தற்போது இந்த நிறுவனம் இந்தியா உள்பட 45 நாடுகளில் தனது இருப்பினை கொண்டுள்ளது. இதில் அமெரிக்கா, சுவேடன், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நார்வே, சுவிட்சர்லாந்து, டென் மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் அடங்கும். இதன் உற்பத்தி தானேவில் செய்யப்படுகின்றது.
யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
இந்த பங்கு வெளியீட்டில் நிறுவனம் 40% தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கு (NII) 18%மும், மீதமுள்ள 42% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications