மத்திய அரசு ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தின் உறுப்பினர்கள், தங்கள் கணக்கை எளிதாக நிர்வகிப்பதற்க்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக EPF உறுப்பினர்கள் தங்கள் உரிமைக்கோரல் தொகையை யுபிஐ மூலம் பெறுவதற்கான முயற்சியில் EPFO அமைப்பு ஈடுபட்டுள்ளது. இதனால் நிதி பரிமாற்றம் மிகவும் சுலபமானதாக மாறக்கூடும். அதிகாரப்பூர்வ வட்டாரங்களின் தகவல்படி இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பிளானை EPFO அமைப்பு தயாரித்துள்ளது. மேலும் அடுத்த 2 முதல் 3 மாதங்களில் யுபிஐ தளங்களில் இந்த வசதியை அறிமுகப்படுத்த நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
EPFO அமைப்பு தனது செயல்பாட்டினை மேம்படுத்துவதற்கும், இந்த அமைப்பின் கீழ் உள்ள 7.4 மில்லியன் உறுப்பினர்களுக்கு எளிதாக பணம் எடுப்பதற்கு உதவுவதற்கும் யூபிஐ ஒருங்கிணைப்பு செயல்பாட்டில் ஆர்வம் காட்டி வருகிறது. யுபஐ உடன் EPF கணக்குகள் இணைக்கப்பட்டால் உறுப்பினர்கள் டிஜிட்டல் வாலெட் மூலம் தங்கள் உரிமை கோரல் தொகையை எளிதாக பெற முடியும். இதற்கு வணிக வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியுடன் இணைந்து தொழிலாளர் அமைச்சகம் டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்தி வருகிறது.

இந்தியாவில் உள்ள பல பகுதிகளில் இன்னும் வங்கி சேவைகளை பெறுவதில் சிரமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் இபிஎப் உறுப்பினர்கள் தங்கள் பிஎப் பணத்தை எடுக்க அல்லது மாற்றம் செய்ய பெரும்பாலும் நகரங்களுக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. ஒருவேளை இந்த யுபிஐ வசதி அறிமுகப்படுத்தப்பட்டால் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் தங்கள் மொபைல் போன் மூலமாகவே எங்கு இருந்து வேண்டுமானாலும் பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டத்தின் மூலம் அனைத்து நபர்களுக்கும் வங்கி கணக்குகளைத் திறப்பதற்கு அரசு உதவி வருகிறது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே மக்களை வங்கி சேவைகளுக்குள் கொண்டு வருவது தான். எனவே யுபிஐ மூலம் பிஎப் பணத்தை எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டால் பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் நோக்கத்தை இது புதிய அம்சம் மேலும் வலுப்படுத்தும் வாய்ப்புள்ளது என்று கிங் ஸ்டப் & காசிவாவின் பார்ட்னரான ரோஹிதாஷ்வ் சின்ஹா கூறினார்.
கடந்த ஆறு-ஏழு மாதங்களில், ஓய்வூதிய சேவைகளை மேம்படுத்துதல், PF உரிமைகோரலை நெறிப்படுத்துதல் மற்றும் IT அமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு EPFO அமைப்பு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications