ஒரு நாடு பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் வளர வளர அதன் பாதுகாப்பு கட்டமைப்புகளையும் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். அந்த கையில் இந்தியா ஆயுத உற்பத்தி, போர் கப்பல், போர் விமானம், ஏவுகணை ஆகியவற்றை தாண்டி தற்போது வெடிமருந்து துறையில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது.
ட்ரைநைட்ரோடொலுயீன் (TNT) என பிரபலமாக அறியப்படும் வெடிமருந்தை விட 2.01 மடங்கு அதிக சக்தி கொண்ட ஒரு புதிய வெடிமருந்தை உருவாக்கி, அதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழையும் பெற்றுள்ளது. இது என்ன பெரிய விஷயமா என பலரும் கேட்கலாம். ஆம், ரொம்ப பெரிய விஷயம்.

Economic Explosives Limited என்ற நிறுவனம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் SEBEX 2 என்ற அபூர்வமான வெடிமருந்தை உருவாக்கி வெற்றிகண்டு உள்ளது. இந்த வெடிமருந்து மூலம் இந்திய பாதுகாப்புத் துறைக்கு புதிய சக்தி கிடைத்துள்ளது.
எந்தொரு ஏவுகணையாக இருந்தாலும், இதில் இருக்கும் வெடிமருந்து தான் மிகவும் முக்கியமானது. இந்த வகையில் இந்திய நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த அதிக ஆற்றல் கொண்ட வெடிமருந்து, உலகின் மிகச் சக்தி வாய்ந்த அணுக்குண்டு அல்லாத வெடிமருந்துகளில் ஒன்றாக உள்ளது.
இந்த புதிய வெடிமருந்து கலவையை, இந்திய கடற்படை விரிவாக சோதனை செய்து அதன் பின்பு ஒப்புதல் சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த புதிய வெடிமருந்து கலவை மூலம் இந்திய ராணுவம், கடற்படை, விமான படைகள் பயன்படுத்தும் வெகுண்டுகள், பீரங்கி குண்டுகள் மற்றும் போர் ஏவுகணைகள் எவ்விதமான எடை வித்தியாசம் செய்யாமல் அதிக அழிவு திறனை பெற உள்ளது.
அதாவது 1 கிலோ ட்ரைநைட்ரோடொலுயீன் (TNT) பயன்படுத்தும் இடத்தில் 500 கிராம் வெடி மருத்தைப் பயன்படுத்தினால் போதும், அதே அளவிற்கான தாக்கத்தையும், அழிவையும் ஏற்படுத்தும். இந்த புதிய மற்றும் அரிய வெடிமருந்தின் பெயர் SEBEX 2.
உலகமெங்கிலும் உள்ள ராணுவங்கள் தங்களுடைய ஆயுதங்களின் திறனை அதிகரிக்க விரும்புவதால், இந்தியா உருவாக்கிய SEBEX 2-க்கு வெளிநாட்டு ஏற்றுமதி சந்தையிலும் பெரும் டிமாண்ட இருப்பதாக கருதப்படுகிறது.
SEBEX 2 வெடிமருந்து, இந்திய கடற்படையின் பாதுகாப்பு ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் சோதனை செய்யப்பட்டுச் சான்றளிக்கப்பட்டுள்ளது. Economic Explosives Limited நிறுவனம் SEBEX 2 மட்டும் அல்லாமல் SITBEX 1, SIMEX 4 என்ற இன்னும் இரண்டு வெடி மருந்தை உருவாக்கியுள்ளது. இதேபோல் அடுத்த 6 மாதத்தில் TNT காட்டிலும் 2.3 மடங்கு அதிக சக்திவாய்ந்த மருத்தை கண்டுபிடிக்கும் பணியில் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இந்த SEBEX 2 வெடிமருந்துகளின் செயல்திறன் TNT-க்கு இணையான தன்மையில் (TNT equivalence) அளவிடப்படுகிறது. இதன் அடிப்படையில் Brahmos ஏவுகணை இப்புதிய வெடிமருத்து மூலம் 1.50 மடங்கு சக்தி வாய்ந்ததாக மாறுகிறது. இதேபோல் பிற ஏவுகணைகள் 1.25-1.30 மடங்கு சக்தி வாய்ந்ததாக மாறுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications