இந்தியாவில் யுபிஎம் முறையில் கட்டணம் செலுத்தும் முறை நாடெங்கும் விரிவடைந்திருக்கிறது. யுபிஐ முறையில் பணப்பரிமாற்றம் செய்வது மிகவும் எளிதானதாக மாறிவிட்டது. நாம் எங்கு சென்றாலும் பணத்தை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. நம்முடைய போனில் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து அல்லது செல்போன் நம்பரை உள்ளீடு செய்தாலே சம்பந்தப்பட்ட நபருக்கு நாம் பணம் அனுப்பிவிட முடிகிறது.
அதிகரிக்கும் யுபிஐ மோசடிகள்: இப்படி யுபிஐ செயலிகள் நாட்டில் பண பரிவர்த்தனையை எளிமையாக்கி இருக்கும் அதே வேளையில் யுபிஐ சேவையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு மோசடிகளும் இந்தியாவில் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக பங்குச்சந்தை சார்ந்த மோசடிகள் அதிகரித்துள்ளன. இந்த மோசடிகளை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன . அந்த வகையில் செபி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

valid என்ற வார்த்தை கொண்ட ஐடிக்கள்: இதன்படி பங்குச்சந்தை இடைத்தரகர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை பெறுவதற்கு ஒரு தனித்துவமான யுபிஐ முகவரியை கொண்டிருப்பார்கள் என செபி அறிவித்துள்ளது. நாம் பணம் செலுத்தக்கூடிய பங்குச்சந்தை இடைத்தரகரின் யுபிஐ ஐடியில் valid என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கும் என்றும் அதுதான் உண்மையான பங்குச்சந்தை இடைத்தரகரின் ஐடி என்றும் செபி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அக்டோபர் 1 முதல் நடைமுறை: இந்த துறை சம்பந்தப்பட்ட பல்வேறு நபர்களிடம் ஆலோசனை பெற்று இந்த முடிவினை எடுத்திருப்பதாக செபி வெளியிட்டுள்ள அறிவிப்பு கூறுகிறது. வரும் அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து இந்த valid என்ற முகவரி கொண்ட யுபிஐ பேமெண்ட் ஐடிக்கள் செயல்பாட்டுக்கு வர இருக்கின்றன. எனவே பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள், மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களுக்கு பணம் செலுத்துபவர்கள் தாங்கள் யு பி ஐ மூலம் பணம் செலுத்தும் போது அந்த யுபிஐ ஐடியில் valid என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும், valid என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தால் மட்டுமே யுபிஐ மூலம் பணம் செலுத்த வேண்டும் என செபி கூறுகிறது.
பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்: செபியில் பதிவு செய்யப்பட்ட தரகர்களுக்கு மட்டுமே இந்த valid என்ற பெயர் கொண்ட தனித்துவமான யுபிஐ ஐடி வழங்கப்பட இருக்கிறது . உதாரணமாக abc என்ற பங்குச்சந்தை இடைத்தரகருக்கு முதலீட்டாளர்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் போது அந்த ஐடி abc.brk@validhdfc அல்லது மியூச்சுவல் ஃபண்டுக்கு பணம் அனுப்புகிறார் என்றால் abc.mf@validhdfc என்றும் ஐடி இருக்கும்.
பங்குச்சந்தை மோசடிகள்: மேலும் நாம் பணம் அனுப்பும் ஐடி செபியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமா என்பதை அறிந்து கொள்வதற்கான வசதியும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. செபி இணையதளத்தில் இதற்கென கொண்டு வரப்பட்ட பிரிவில் யுபிஐ ஐடி உள்ளிட்டு அது அங்கீகரிக்கப்பட்ட அமைப்பா என்பதை தெரிந்து கொண்டும் பணம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பங்குச்சந்தை சார்ந்து பல்வேறு மோசடிகள் நடைபெற்று வரக்கூடிய சூழலில் செபி இப்படி ஒரு நடைமுறையை கொண்டு வந்திருக்கிறது இதன் மூலம் பெருமளவில் மோசடிகள் தவிர்க்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications