பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEBI இன்ரு ஆறு நிறுவனங்களுக்கு ஐபிஓ வெளியிட்டு முதலீட்டை திரட்ட இன்று அனுமதி வழங்கியுள்ளது. இதில் முக்கியமாக ஐடி துறையை சேர்ந்த ஹெக்ஸவேர் டெக்னாலஜிஸ், PMEA சோலார் டெக் சொல்யூஷன்ஸ், ஸ்கோடா டியூப்ஸ், அஜாக்ஸ் என்ஜினீயரிங், ஆல் டைம் பிளாஸ்டிக்ஸ் மற்றும் விக்ரான் என்ஜினீயரிங் ஆகிய 6 நிறுவனங்களுக்கு ஐபிஓ வெளியிட இன்று அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.
அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வரும் வேளையில், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடக்கும் வேளையிலும், டாலர் மதிப்பு உயர்வதற்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தை தடுமாறி வருகிறது. இதற்கு மத்தியில் ஐபிஓ மூலம் புதிய முதலீடுகளை ஈர்க்கும் ஸ்மார்ட் ஐடியாவை நாட்டின் முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்கள் கையாண்டு வருகிறது. இது முதலீட்டாளர்களுக்கு தங்களது முதலீட்டை பன்முகப்படுத்த சிறந்த வழியாக உள்ளது.

இந்த நிலையில் ஜனவரி 14 முதல் 17 வரை இந்த 6 நிறுவனங்களின் வரைவு ஆவணங்களுக்கு செபியின் கண்காணிப்பு அறிக்கையை வழங்கியது. இதன் மூலம் ஐபிஓ வெளியிட செபி ஒப்புதலைக் கொடுத்துள்ளது. இருப்பினும், ஆனந்த் ரதி ஷேர் அண்ட் ஸ்டாக் புரோக்கர்ஸ் நிறுவனத்தின் DRHP ஆவணங்கள் திருத்தத்திற்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
தற்போது ஐபிஓ வெளியிடப்பட்ட ஹெக்ஸவேர் டெக்னாலஜிஸ் மற்றும் அஜாக்ஸ் என்ஜினீயரிங் ஆகிய நிறுவனங்கள் OFS வழியாக மட்டுமே ஐபிஓ-வில் பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை திரட்ட உள்ளது.
PMEA சோலார் டெக் சாலூஷன்ஸ், ஆல் டைம் பிளாஸ்டிக்ஸ் மற்றும் விக்ரான் என்ஜினீயரிங் ஆகிய நிறுவனங்கள் புதிய பங்குகள் மற்றும் OFS வழியாக பங்ககுளை விற்பனை செய்து ஐபிஓ-வில் முதலீட்டை திரட்ட உள்ளது. மேலும் ஸ்கோடா டியூப்ஸ் நிறுவனம் மட்டுமே ஐபிஓ மூலம் பொதுமக்களுக்கு புதிய பங்குகளை மட்டுமே வெளியிட்டு முதலீட்டை திரட்ட உள்ளது.
இன்று வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 453.11 புள்ளிகள் அதிகரித்து 77,073.44 புள்ளிகளை எட்டியது. இதேபோல் நிஃப்டி குறியீடு 141.55 புள்ளிகள் உயர்ந்து 23,344.75 புள்ளிகளை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications