பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, இண்டஸ்இண்ட் வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாகி சுமந்த் கத்பாலியா உட்பட ஐந்து மூத்த வங்கி நிர்வாகிகள் மீது இன்சைடர் டிரேடிங் வழக்கில் தற்காலிக உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுமந்த் கத்பாலியா உட்பட 5 முக்கிய தலைவர்கள் இண்டஸ்இண்ட் வங்கி பங்குகள் சரியக்கூடும் என்ற விபரம் அறிந்திருந்த போதும், அதை பங்குச்சந்தையிடம் முறையாக வெளியிடுவதற்கு முன்பு அவர்கள் வைத்திருக்கும் வங்கியின் பங்குகளை விற்று, சுமார் 20 கோடி ரூபாய் இழப்பை தவிர்த்துள்ளாது செபி கண்டறிந்ததுள்ளது. இதையடுத்து, இந்த 5 பேரின் வங்கி மற்றும் டீமேட் கணக்குகள் முடக்கப்பட்டு, பங்கு பரிவர்த்தனைகளில் ஈடுபட அடுத்த உத்தரவு வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இண்டஸ்இண்ட் வங்கியின் டெரிவேடிவ் போர்ட்ஃபோலியோவில் ஏற்பட்ட முரண்பாடுகளே இந்த வழக்கின் மைய புள்ளியாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு இறுதியில், ரிசர்வ் வங்கியின் புதிய டெரிவேடிவ் கணக்கியல் வழிகாட்டுதல்களை அடுத்து இண்டஸ்இண்ட் வங்கியில் இருக்கும் இப்பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது.
செபியின் உத்தரவின்படி, வங்கியின் முக்கிய அதிகாரிகள் மத்தியில் பகிரப்பட்ட மின்னஞ்சல்களில், டிசம்பர் 2023-க்குள் 1,572 கோடி ரூபாய் நிதி பாதிப்புகள் ஏற்படும் என்ற தகவல் இந்த 5 பேருக்கு மத்தியில் பகிரப்பட்டு உள்ளது. இது வங்கியின் மொத்த மதிப்பில் 2.35% ஆகும்.
ஆனால், இந்த தகவல் பங்கு பரிவர்த்தனைகளுக்கு மார்ச் 10, 2025 அன்று தான் இண்டஸ்இண்ட் வங்கி வெளியிட்டது. இதன் விளைவாக, அன்று வங்கியின் பங்கு விலை 27% சரிந்து, 900.60 ரூபாயில் இருந்து 655.95 ரூபாயாக வீழ்ச்சியடைந்தது. இந்த சரிவில் இருந்து காத்துக்கொள்ளவே இந்த 5 பேர் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான இண்டஸ்இண்ட் வங்கி பங்குகளை விற்பனை செய்தது மூலம் 20 கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பை தவிர்த்துள்ளனர் என செபி கண்டுப்பிடித்துள்ளது.
இந்த நிலையில் செபி வெளியிட்டுள்ள உத்தரவின்படி, ஐந்து நிர்வாகிகளும் அவர்களது நிதி மற்றும் சொத்து விவரங்களை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவர்களின் வங்கி மற்றும் டீமேட் கணக்குகள் முடக்கப்பட்டு, அவர்கள் பெற்ற லாபத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
மேலும், இந்த 5 பேரும் பங்கு பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது இண்டஸ்இண்ட் வங்கியின் நிர்வாக நடவடிக்கைகளை மேலும் சிக்கலாக்கலாம்.


Click it and Unblock the Notifications