இந்தியாவின் முன்னணி ஆன்லைன் முதலீட்டு வர்த்தக தளமான IIFL செக்யூரிட்டிஸ் பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 19.24 சதவீதம் சரிந்தது. இதற்கு முக்கிய காரணம் இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி விதித்த தடை அறிவிப்பு தான்.
ஏப்ரல் 2011 முதல் ஜனவரி 2017 வரையிலான வெவ்வேறு காலகட்டங்களில் பல விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கு புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது என சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபி தடை விதித்துள்ளது. இந்த தடை அறிவிப்பை தொடர்ந்து IIFL செக்யூரிட்டிஸ் பங்குகள் 57.5 ரூபாய் வரையில் சரிந்தது.

ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் 19, 2014 வரை நிறுவனத்தின் நான்கு வெவ்வேறு அலுவலகங்களில் ஒரே நேரத்தில் IIFL இன் கணக்குப் புத்தகங்களை SEBI ஆறு விரிவான ஆய்வுகளை நடத்தியது.
இந்த ஆய்வின் முடிவுகளில் ஐஐஎஃப்எல் தனது சொந்த நிதியை, வாடிக்கையாளர்களின் நிதியிலிருந்து பிரித்து நிர்வாகம் செய்ய தவறியது, டெபிட் பேலன்ஸ் உள்ள வாடிக்கையாளர்களின் நலனுக்காக வாடிக்கையாளர்களின் நிதிகளில் கடன் நிலுவைகளை தவறாகப் பயன்படுத்தியது மற்றும் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் செய்யப்பட்ட முறைகேடுகளை செபி கண்டறிந்துள்ளது.
இதை தொடர்ந்து தான் IIFL செக்யூரிட்டிஸ் இரண்டு ஆண்டுகளுக்கு புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது என செபி தடை விதித்துள்ளது. மேலும் செபியின் உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில், ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ், செக்யூரிட்டிஸ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் 2 வருட தடை உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யத் தயாராகி வருவதாகக் IIFL தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல் மற்றொரு வழக்கான Shilpi Cable Technologies விவகாரத்தில் insider trading விதிமுறைகளை மீறியதற்காக செபி திங்கட்கிழமை ஆறு நிறுவனங்களை பத்திரச் சந்தைகளில் இருந்து ஓராண்டுக்கு தடை செய்தது மட்டும் அல்லாமல் மொத்தம் 70 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
தடை செய்யப்பட்ட 6 நிறுவனங்கள் அல்லது தரப்புகள் பட்டியல் தினேஷ் குப்தா, தினேஷ் குப்தா HUF, ராஜேஷ் குப்தா, ராஜேஷ் குப்தா HUF, நிர்மலா குப்தா, அஜய் பின்கேப் கன்சல்டென்ட்ஸ் ஆகியோர் மீது இந்த ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications