2017ஆம் ஆண்டில் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தில் இன்சைடர் டிரேடிங் செய்த குற்றம் நிரூபணம் செய்யப்பட்ட காரணத்தால் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி பியூச்சர் குரூப் தலைவரான கிஷோர் பியானி மற்றும் அவரது சகோதரர் அனில் பியானி ஆகிய இருவரையும், பியூச்சர் கார்ப்பரேட் ரிசோர்சஸ் லிமிடெட் நிறுவனத்தையும் ஒரு வருடத்திற்குப் பங்குச்சந்தையை அணுகக் கூடாது, வர்த்தகத்திலும் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் மூலம் வர்த்தக ஒப்புதலுக்காகக் காத்திருப்பவை எவ்விதமான பாதிப்பையும் எதிர்கொள்ளாது என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது. செபியின் உத்தரவின் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் இடையிலான ஒப்பந்தம் எவ்விதமான பாதிப்பும், தடையும் ஏற்படாது என்பது தெளிவாகியுள்ளது.

பியூச்சர் குரூப் தற்போது ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் இடையிலான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கத் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் கோரியுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு ஏற்கனவே செபி மற்றும் சிசிஐ அமைப்பு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அமேசான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் காரணமாகச் சிங்கப்பூர் நடுவர் அமைப்பின் இறுதி தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது.
2017ஆம் ஆண்டு மார்ச் 10 முதல் ஏப்ரல் 20 வரையில் பியூச்சர் ரீடைல் நிறுவனப் பங்குகள் செய்யப்பட்ட பரிமாற்றங்களில் இன்சைடர் டிரேடிங் செய்திருக்க வாய்ப்புகள் உள்ளது எனச் செபி வழக்கு தொடுத்து இருந்தது.
பியூச்சர் குரூப் ஏப்ரல் 20, 2017ல் பங்குச்சந்தைக்கு அளித்த தகவல்கள் படி பியூச்சர் ரீடைல், ப்ளூராக் ஈசர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பாராகிஸ் ஹோம் ரீடைல் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மத்தியில் செய்யப்பட்ட மறு சீரமைப்பு மூலம் சில முக்கிய வர்த்தகங்கள் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தில் இருந்து தனியாகப் பிரிந்து வந்துள்ளது. இந்த மறுசீரமைப்பில் முறைகேடு நடந்துள்ளதாகச் செபி அறிவித்து ஒரு வருட தடையை அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications