இந்தியாவின் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானி முறைகேடாக நிறுவனத்தின் நிதியைக் கடனாகக் கொடுத்துத் தனிப்பட்ட முறையில் பலனடைந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி, அனில் அம்பானி மற்றும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள 24 நிறுவனங்கள், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் என அனைவரும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட 5 வருடம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் செபி அமைப்பு அனில் அம்பானிக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதிப்பது மட்டும் அல்லாமல் அடுத்த 5 வருடத்திற்குப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்தொரு நிறுவனத்திலும் தலைவராகவோ, முக்கிய நிர்வாக பொறுப்பிலோ இருக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பல வழிகளில் பாதிப்பை எதிர்கொண்டு வரும் அனில் அம்பானிக்கு இது மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் முறைகேடாக நிதி பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், செபி விசாரணை நடத்திய 222 பக்க இறுதி ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது.
இந்த ஆய்வில் அனில் அம்பானி, ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் இருக்கும் நிதியை இந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளின் உதவியுடன் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை முறைகேடாக இவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர்கள் இதை நிறுத்த முயன்றும், முறையற்ற வகையில் இந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளுக்குச் சொந்தமான நிறுவனத்தின் நிதிநிலைக்கு முற்றிலும் புறம்பான கடன்களை அள்ளிக்கொடுக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டு உள்ளது.
அது அனைத்தும் அனில் அம்பானி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ADA குரூப் மூலம் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் வைத்திருக்கும் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பணத்தைத் திருடப்பட்டு உள்ளது. மேலும் இப்படிக் கொடுக்கப்பட்ட கடன்கள் திருப்பி செலுத்தப்படாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ்-ல் முதலீடு செய்தவர்களும், பங்கு முதலீட்டாளர்களும் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மார்ச் 2018ல் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவன பங்கு விலை 59.60 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச் 2020ல் இதன் விலை வெறும் 0.75 ரூபாயாக குறைந்துள்ளது. இன்னுமும் 9 லட்சம் முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
தற்போது செபி தடை செய்துள்ள 24 நிறுவனத்தில் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளான அமித் பாப்னா, ரவீந்திர சுதல்கர் மற்றும் பிங்கேஷ் ஆர். ஷா ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்களும் அடங்கும்.
செபி அமைப்பு அனில் அம்பானிக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதித்தது போல், அமித் பாப்னா-க்கு ரூ.27 கோடியும், ரவீந்திர சுதல்கர் ரூ.26 கோடியும் மற்றும் பிங்கேஷ் ஆர். ஷா ரூ.21 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ரிலையன்ஸ் யூனிக்கார்ன் என்டர்பிரைசஸ், ரிலையன்ஸ் எக்ஸ்சேஞ்ச் நெக்ஸ்ட் எல்டி, ரிலையன்ஸ் கமர்சியல் ஃபைனான்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் கிளீன்ஜென் லிமிடெட், ரிலையன்ஸ் பிசினஸ் பிராட்காஸ்ட் நியூஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் பிக் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் தலா ரூ. 25 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications