இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தை ஆகஸ்ட் மாதத்திற்குள்ள விசாரணை செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஓடிக்கொண்டு இருந்தாலும், பிற முக்கியமான விஷயங்களையும் ஆய்வு செய்து வருகிறது.
இந்த நிலையில் செபி இன்று ஜீ எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளரான Essel group-ன் தலைவர் சுபாஷ் சந்திரா மற்றும் ஜீ எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் சுபாஷ் சந்திராவின் மகனுமான புனித் கோங்கா ஆகியோர் மீது புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுபாஷ் சந்தரா, புனித் கோங்கா ஆகிய இருவரும் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்களில் எந்தொரு டைரெக்டர் அல்லது முக்கிய நிர்வாக பொறுப்பிலும் இருக்க கூடாது என தடை விதித்துள்ளது. எதற்காக இந்த திடீர் தடை..? இந்த தடையால் என்ன நடக்கும்..? இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு என்ன வாய்ப்பு உள்ளது, இதை எப்படி முகேஷ் அம்பானி பயன்படுத்துவார்.
இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி செய்த ஆய்வில் சுபாஷ் சந்தரா, புனித் கோங்கா ஆகிய இருவரும் தங்களுடைய அதிகாரம் மற்றும் பதவியை பயன்படுத்தி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனத்தில் இருக்கும் பணத்தை கையாடல் செய்துள்ளதை கண்டுப்பிடித்துள்ளது, இதனாலேயே இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஜீ நிறுவனத்தில் அதன் ப்ரோமோட்டர் குடும்பம் வெறும் 3.99 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துக்கொண்டு, புனித் கோங்கா தொடர்ந்து சிஇஓ-வாக உள்ளார்.
சுபாஷ் சந்தரா, புனித் கோங்கா இணைந்து ஜீ நிறுவனத்தின் சொத்துக்களை தங்கள் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பிற நிறுவனங்களுக்கு சாதகமாக்கப்பட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனத்தின் பணத்தை 2 நாளில் 13 நிறுவனங்கள் வழியாக மாற்றி திருடப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். சுபாஷ் சந்தரா, புனித் கோங்கா இணைந்து ஜீ நிறுவனத்தின் நிதியை Shirpur Gold Refinery Ltd (SGRL) நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது.
ஜீ நிறுவனத்தின் சுபாஷ் சந்திரா குடும்பம் 3.44 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நிலையில், Invesco Fund நிறுவனம் சுமார் 17.88 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்த நிலையில் ஜீ நிறுவனத்தின் பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு விற்க Invesco Fund பரிந்துரை செய்த நிலையில், புனித் கோங்கா டீம் சோனி நிறுவனத்துடன் தனக்கு தேவையான வசதிகள் உடன் டீல்-ஐ ஓகே செய்தது.
ஜீ - சோனி இணைப்பில் சுபாஷ் சந்திரா குடும்பம் கூட்டணி நிறுவனத்தில் 4 சதவீத பங்குகளையும், புனித் கோங்கா 5 வருடம் சிஇஓ-வாக தொடர அனுமதி வழங்கப்பட்டது. இந்த டீல் மூலம் Invesco Fund நிறுவனத்தின் பங்கு இருப்பு 17.88 சதவீதத்தில் இருந்து 8.4% சதவீதமாக குறையும்.
தற்போது செபி சுபாஷ் சந்தரா, புனித் கோங்கா ஆகிய இருவரும் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்களில் எந்தொரு டைரெக்டர் அல்லது முக்கிய நிர்வாக பொறுப்பிலும் இருக்க கூடாது என தடை விதித்துள்ளது. இதனால் உயர்மட்ட நிர்வாகத்தில் மாற்றம் வரும், இது ஜீ - சோனி இணைப்பு திட்டம் தோல்வி அடையவும் வாய்ப்பு உள்ளது,
ஜீ நிறுவனத்தில் நடக்கும் இந்த நிர்வாக மாற்றம் மூலம் ஜீ நிறுவனத்தில் சிறு முதலீட்டாளர்களை பாதுகாக்கும் முயற்சியாக மீண்டும் Invesco Fund ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ஐ டீல்-க்கு கொண்டு வரலாம். முகேஷ் அம்பானி மீடியா துறையில் அதிகப்படியான முதலீடுகளை செய்து வரும் வேளையில் இந்த வாய்ப்பை விட்டுக்கொடுக்கமாட்டார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications