செபி ஆணையம் நேஷனல் ஸ்பார்ட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெடின் கீழ் சட்டவிரோதமாக கூட்டணி ஒப்பந்தங்களில் ஈடுப்பட்ட 4 தரகு நிறுவனங்களின் பதிவை ரத்து செய்துள்ளது.
சென்ற ஆண்டு நவம்பர் 2022 இல், இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ஊழலில் ஈடுப்பட்டதற்காக, NSEL (National Spot Exchange) கீழ் உள்ள 5 தரகு நிறுவனங்களுக்கு 6 மாதகால தடை விதித்தது.
அதனைத் தொடர்ந்து நேஷனல் ஸ்பார்ட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெடின் (NSEL) கீழ் செயல்படும் சில தரகு நிறுவனங்களின் உரிமைகளை பிப்ரவரி 28 ஆம் தேதி ரத்து செய்து, அவை செயல்படவும் தடை விதித்துள்ளது. அதுகுறித்து இனி விரிவாகக் காண்போம்.
ரத்து செய்யப்பட்ட தரகு நிறுவனங்கள்!
செபி ஆணையம் NSEL கீழ் சட்டவிரோத கூட்டணியில் ஈடுபட்டதாக கூறி Share India Commodity Brokers, Sharewealth Commodities, CIL Commodities and Eureka Commodity Brokerage தரகு நிறுவனங்களின் உரிமம் மற்றும் பதிவை ரத்து செய்துள்ளது.
முந்தைய நடவடிக்கை
அந்த புதிய அறிவிப்பு செபி Vertex Commodities, Finpro Pvt Ltd மற்றும் Way2Wealth போன்ற பிரபல தரகு நிறுவனங்கள் உரிமம் ரத்து செய்யப்பட்ட ஒருநாள் கழித்து இதே குற்றதிற்காக தற்போது 4 தரகு நிறுவனங்களின் உரிமம் மற்றும் பதிவை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI)!
செபி ஆணையம் இந்திய அரசாங்கத்தால் 1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ ஒழுங்குமுறை அமைப்பாகும். செபி பத்திரச் சந்தை நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்தவதிலும், முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களின் நலன்களை பாதுகாக்கும் பணிகளை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
அதிகாரம்
செபி அமைப்பின் கீழ் செயல்படும் ஏதேனும் தரகு நிறுவனங்கள் அதன் விதிகளை பின்பற்றாமலோ அல்லது வேறு ஏதேனும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும்பட்சத்தில், அதன் உரிமங்களை ரத்து செய்யும் அதிகாரத்தையும் செபி ஆணையம் கொண்டுள்ளது.
தரகு நிறுவனங்களின் தடைக்கான காரணம்!
செப்டம்பர் 2009 இல் வணிகப் பயன்பாடுகளுக்காக NSEL பேர்ட் காண்ட்ராக்ட் (paired contracts) எனும் ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இரண்டு வெவ்வேறு ஒப்பந்தங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் வெவ்வேறு பொருட்களை, வெவ்வேறு விலையில் வாங்கவும், விற்கவும் அனுமதித்தது.
முதலீட்டாளர்
இதன் மூலம் முதலீட்டாளர்கள் குறுகிய கால ஒப்பந்தங்களை வாங்கவும் , நீண்டகால ஒப்பந்தங்களை விற்கவும் செய்யலாம். அதுமட்டுமின்றி அதே நேரத்தில் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விலையில் வாங்கலாம்.
ஆனால் இதற்கு நேர்மாறாக ஒரே நாளில், ஒரே நேரத்தில் மற்றும் வெவ்வேறு விலைகளில் எதிர் எதிர் தரகு நிறுவனங்களுடன் செயல்பட்டதை செபி ஆணையம் கண்டுபிடித்துள்ளது. அதனையடுத்து அதன் உரிமங்களை ரத்து செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள் பாதிப்பு!
NSEL பேர்ட் காண்ட்ராக்ட் (paired contracts) எனும் வர்த்தக முறை மூலம் வாடிக்கையாளர்கள் ரூ. 5,500 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக அந்த ஆர்ட்கள் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இனி இதுபோல நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து தரகு நிறுவனங்களின் உரிமமும் உடனுக்குடன் ரத்து செய்யப்படும் என செபி எச்சரித்துள்ளது.
BRH Wealth Kreators
திங்கட்கிழமை செபி வெளியிட்ட ஒரு தனி உத்தரவில், பங்கு தரகர்களின் விதிமுறைகளுக்கு இணங்காததற்காக BRH Wealth Kreators Ltd இன் பதிவை செபி ரத்து செய்தது. பிஆர்ஹெச் வெல்த் கிரியேட்டர்ஸ் தனது வாடிக்கையாளர்களின் நிதியை தவறாகப் பயன்படுத்தியதையும், முதலீட்டாளர்களின் புகார்களை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் சரிசெய்யத் தவறியதையும் செபி கண்டறிந்து இந்த உத்தரவை வெளியிட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?



Click it and Unblock the Notifications