சென்னை: அதானி குழுமத்தின் பங்குகளை முறைகேடாக உயர்த்தியதில் முக்கிய பங்கு வகித்த வினோத் அதானிக்கு சொந்தமான மொரிஷியஸ் நிறுவனத்தில் செபி தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவருக்கு பங்கு இருப்பு உள்ளதாக அமெரிக்க ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மத்திய மாதவி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் கடுமையாக மறுத்துள்ளனர்.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி இரவு வெளியிட்ட அறிக்கையில், மாதவி புச் மற்றும் அவரது கணவர் அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டியிருந்தது.

இதற்கு 10 ஆம் தேதி நள்ளிரவில் பதிலளித்துள்ள மாதவி புச் மற்றும் அவரது கணவர், ஹிண்டன்பர்க் நிறுவனம் தங்களது பெயரை கெடுக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ஹிண்டன்பர்க் மீது SEBI ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளதற்குப் பதிலடியாகவே இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
"எங்களுக்கு எதிராக ஆகஸ்ட் 10, 2024 அன்று வெளியிடப்பட்ட ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளையும் குறிப்புகளையும் நாங்கள் வன்மையாக மறுக்கிறோம். இதில் எந்த உண்மையும் இல்லை. எங்கள் வாழ்க்கையும் முதலீடுகளும் வெளிப்படையானவை" என்று மாதபி புச் மற்றும் அவரது கணவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த காலங்களில் SEBI-க்கு தேவையான தகவல்கள் அனைத்தும் தகவல்களையும் எங்கள் குடும்பம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு நிறுவனமும் கேட்டாலும் நிதி ஆவணங்களை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், அதானி விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. SEBI தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications