நாடாளுமன்றத்தின் பொது கணக்கு குழு (PAC) கூட்டம் இன்று நடக்க இருந்த நிலையில், காலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. செபி அணைப்பின் தலைவர் மாதபி புரி புச் மற்றும் மற்ற அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
கே.சி.வேணுகோபால் தலைமையிலான PAC குழு செபியின் செயல்திறனை ஆய்வு செய்யவே இக்கூட்டம் திட்டமிடப்பட்ட நிலையில், மாதபி புரி புச் அவசர வேலை காரணமாக டெல்லிக்குத் தனிப்பட்ட அவசர காரணங்களுக்காக டெல்லி வர முடியாத காரணத்தால் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதானி விவகாரத்தில் செபி கடுமையான நடவடிக்கை எடுக்காதது முதல் செபியின் ரகசிய வலை அமைப்பில் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவருக்கு தொடர்புடையது வரையில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீண்ட பெரிய அறிக்கையை வெளியிட்டது.
இந்த நிலையில் தான் நாடாளுமன்றத்தின் பொது கணக்கு குழு (PAC) செபியின் செயல்திறனை ஆய்வு செய்ய இன்றைய கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
செபியின் தலைவர் மாதபி புரி புச் தனிப்பட்ட அவசர காரணத்தால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று பொது கணக்கு குழுவிடம் தெரிவித்தனர். இதையடுத்து, பெண் உறுப்பினர் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று, கூட்டத்தை ஒத்திவைக்கக் குழு முடிவு செய்தது.
இதுகுறித்து PAC குழுவின் தலைவர் கே.சி.வேணுகோபால் கூறுகையில் "இன்று காலை 9:30 மணிக்கு, செபியின் தலைவர் மற்றும் மற்ற உறுப்பினர்களிடமிருந்து தனிப்பட்ட அவசர காரணத்தால் டெல்லிக்குப் பயணம் செய்ய முடியாது என்று தகவல் கிடைத்தது" என்று பிடிஐ செய்தியாளர்களிடம் கூறினார்.


Click it and Unblock the Notifications