பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEBI அமைப்பின் தற்போதைய தலைவரான மாதபி புரி புச் பதவியில் இருந்து விலகவுள்ள நிலையில், இந்திய அரசு அவரின் இடத்திற்குப் புதிதாக ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் அரசு வட்டாரத்தில் இருந்து வெளியில் வந்த விஷயங்கள் அடிப்படையில் மத்திய அரசு தேடல் செயல்முறை சுமார் ஒரு வாரம் முதல் பத்து நாட்களுக்கு முன்பு தொடங்கியதாக தெரிகிறது.
மத்திய அரசு அப்பதவிக்கு பொருத்தமான அதிகாரியைத் தீவிரமாகத் தேடி வருகிறது என்றாலும், புச் அவர்களின் பதவியில் நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதேவேளையில் இப்பதவியில் விண்ணப்பங்களை வரவேற்கும் அதிகாரப்பூர்வ செயல்முறை வரும் வாரங்களில் தொடங்கும் என்றும், இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாதபி புரி புச் பதவியில் இருந்து விலக என்ன காரணம்?: மாதபி புரி புச் 2022 மார்ச் மாதம் மூன்று ஆண்டு காலத்திற்கு SEBI அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றார், இது 2025 பிப்ரவரி 28 அன்று நிறைவுடைய உள்ளது. இதற்கு முன், அவர் SEBI இல் ஐந்து ஆண்டுகள் முழுநேர உறுப்பினராக பணியாற்றினார்.
செபி அமைப்புக்கான புதிய தலைவரைத் தேடும் செயல்முறை துவங்கினாலும், மாதபி புரி புச் தனது பதவியிலிருந்து முன்கூட்டியே விலக வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஹிண்டன்பெர்க் ரிச்ரச் அமைப்பு மாதபி புரி புச் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக மாதபி பதவி காலம் முடியும் முன்னரே பதவி விலக வாய்ப்புகள் இல்லை என்பதை ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.
இதன் மூலம் மாதபி புரி புச் பதவி காலம் முடிவு வரை அலுவலகத்தில் இருப்பார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் இந்த விஷயம் குறித்து கேட்டபோது, நிதி அமைச்சகம் எவ்விதமான பதிலையும் அளிக்கவில்லை என்றும், அதேபோல, SEBI இன் செய்தி தொடர்பாளரும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் என்றும் மனிகன்ட்ரோல் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications