பாதுகாப்பான முதலீடும், உறுதியான லாபமும் வேண்டும் என நினைப்பவர்கள் எப்போதும் ஒரு மெலிசான கோட்டிலேயே பயணிப்பார்கள். இவர்களுக்காகவே சூப்பரான முதலீட்டு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது வங்கி வைப்பு நிதியைக் காட்டிலும் அதிக வட்டி விகிதம், பங்குச்சந்தை முதலீட்டைக் காட்டிலும் குறைவான ரிஸ்க் கொண்ட முதலீட்டுப் பிரிவு தான் கார்ப்ரேட் பத்திர முதலீடு.
ஒரு காலத்தில் கார்ப்ரேட் பத்திர முதலீட்டுப் பக்கமே செல்ல முடியாமல் இருந்து ரீடைல் முதலீட்டாளர்களுக்கு தற்போது புதிய மாற்றங்கள் உடன், கதவுகள் திறக்கப்படுவது மட்டும் அல்லாமல் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு உள்ளதாக Zerodha இணை நிறுவனர் நிதின் காமத் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEBI கார்ப்பரேட் கடன் பத்திரங்களின் சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பையும், ஈடுபாட்டையும் அதிகரிக்கும் வகையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
இதுவரை, கடன் பத்திரங்கள் பெரும்பாலும் அதிக வருமானம் கொண்ட தனிநபர்களுக்கான (HNI) முதலீட்டுக் கருவிகளாகவே இருந்தன. ஆனால், செபி எடுத்துள்ள புதிய நடவடிக்கை மூலம், இனி சாதாரண ரீடைல் முதலீட்டாளர்களும் கார்ப்ரேட் கடன் பத்திரங்களில் எளிதாக முதலீடு செய்ய முடியும்.
கடன் பத்திரங்களின் முக மதிப்பைக் குறைப்பதன் மூலம் சில்லறை முதலீட்டாளர்களை ஈர்க்கும் நடவடிக்கையைச் செபி மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்பு, கடன் பத்திரங்களின் முக மதிப்பு ரூ.1 லட்சமாக இருந்தது. இதை தற்போது ரூ.10,000 ஆகக் குறைத்துள்ளது செபி, இதை வலியுறுத்தித் தான் Zerodha இணை நிறுவனர் நிதின் காமத் பேசுகிறார்.
இந்தியாவில் பத்திரச் சந்தைக்கான மிகப்பெரிய சீர்திருத்தங்களில் ஒன்றாக, செபி அமைப்பு பத்திர முதலீடுகளின் குறைந்தபட்ச டிக்கெட் அளவை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.10,000 ஆகக் குறைக்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதுவரை 99% பத்திரங்களின் குறைந்தபட்ச டிக்கெட் அளவு ரூ. 1 லட்சமாக இருந்ததால், இந்த நடவடிக்கை இந்தியப் பத்திரச் சந்தையில் சில்லறை விற்பனை பங்களிப்பைப் பெரிய அளவில் அதிகரிக்கும்.

ஜெரோதா இணை நிறுவனர் நிதின் காமத் தனது டிவிட்டர் பதிவில் "நிறுவனங்கள் இப்போது ரூ.10,000 முக மதிப்புள்ள கடன் பத்திரங்களை வழங்க முடியும். இது கடன் பத்திர சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க உதவும் சிறந்த நடவடிக்கையாகும். கடந்த சில ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களின் மூலம், செபி சிறிய முதலீட்டாளர்களுக்கு கார்ப்ரேட் கடன் பத்திரங்களை அணுகக்கூடியதாக மாற்றுவதில் வியக்க வைக்கும் மாற்றத்தைச் செய்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு, சிறிய முக மதிப்புள்ள கடன் பத்திரங்கள் கிடைக்காதது குறித்து காமத் வருத்தம் தெரிவித்திருந்தார். "பெரும்பாலான கடன் பத்திரங்கள் தனிப்பட்ட முதலீடுகள் மூலம் வழங்கப்படுகின்றன, அவற்றின் முக மதிப்பு ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கும். இதன் காரணமாக, சில்லறை முதலீட்டாளர்கள் கடன் பத்திர சந்தையில் பங்கேற்க முடியவில்லை" என்று அவர் கூறியிருந்தார்.
ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்டுகள் (REITs) மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டு டிரஸ்டுகள் (InvITs) ஆகியவற்றின் முதலீட்டு அடிப்படையில், unit-based employee benefits (UBEB) ஒரு கட்டமைப்பைச் செபி வெளியிட முடிவு செய்துள்ளது.
முக மதிப்பைக் குறைப்பதைத் தவிர, தகுதி வாய்ந்த பத்திர முதலீட்டாளர்களை அடையாளம் காண்பதற்கான பதிவு தேதியைச் செபி தெரியப்படுத்தியுள்ளது. மேலும் நிறுவனங்களும் பத்திரங்கள் வெளியிடுவதில், பத்திரங்களைப் பதிவு செய்தல், பொது வெளியில் அறிவித்தல் போன்ற பல முக்கியமான விஷயங்களை ப்ரேம்வொர்க் ஆக கொண்டு வந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
இதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் கார்ப்ரேட் கடன் பத்திரங்கள் இந்திய மக்களின் முக்கியமான முதலீடாக இருக்கும் என நம்பப்படுகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications