டெல்லி: முதலீட்டாளர்களுக்கு பர்சனல் பைனான்ஸ் பற்றிய கல்வி அறிவை வழங்குவதற்காக, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) புதிய Saa ₹thi 2.0 என்ற மொபைல் செயலியை கடந்த திங்கள்கிழமை அறிமுகம் செய்தது.
முதலீட்டாளர்கள் பலர், பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற சிக்கலான விஷயங்களை புரிந்துகொள்ள முடியாமல் திணறுகின்றனர். அதிலும் ஆரம்ப நிலையாளர்களுக்கு, இதுபோன்ற விஷயங்கள் சற்று சிக்கலானதாகவே இருக்கும். இதனால் தவறான முதலீடுகள் செய்து பணத்தை இழக்கும் அபாயம் உள்ளது. இந்தச் சூழலில், முதலீட்டாளர்களுக்கு நிதி கல்வியை எளிதாகக் கற்றுத்தரும் வகையில் Saa ₹thi 2.0 செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

Saa ₹thi 2.0 செயலியின் சிறப்பம்சங்கள்:
யூசர் பிரெண்ட்லி இன்டர்பேஸ் (User Friendly Interface): எளிமையான மற்றும் பயன்படுத்த எளிதான இன்டர்பேஸ் கொண்ட இந்த செயலி, நிதி கருத்துகளை புரிந்துகொள்ள உதவுகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டர்கள்: ஓய்வுகால திட்டமிடல், குழந்தைகளின் கல்விக்கான செலவு போன்ற பல்வேறு நிதி இலக்குகளுக்கான, நிதி கால்குலேட்டர்கள் இந்த செயலியில் உள்ளன. KYC (Know Your Customer) நடைமுறைகள், பங்குச்சந்தை அடிப்படைகள், மியூச்சுவல் ஃபண்டுகள், பத்திரங்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் கன்டென்ட் வழங்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி எளிதில் நீங்கள் பங்குச் சந்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.
வீடியோக்கள்: சிக்கலான நிதி சார்ந்த விஷயங்களை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் வகையில் வீடியோக்கள் இந்த செயலியில் உள்ளன. முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டு தொடர்பான பிரச்சனைகளை புகாரளிக்க இந்த செயலி உதவுகிறது.
முதலீட்டாளர்கள் ஏன் Saa ₹thi 2.0 செயலியை பயன்படுத்த வேண்டும்?
1. நிதி கல்வி பெறுவதற்கு எளிதான வழி.
2. பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவற்றைப் பற்றி அடிப்படை அறிவைப் பெற உதவும்.
3. நம்பகமான மற்றும் பாதுகாப்பான முதலீடுகளை தேர்வு செய்ய உதவும்.
4. முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பு தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும். முதலீட்டாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் மூலம் Saa ₹thi 2.0 செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
சில நேரங்களில் சமூக ஊடகங்களை பயன்படுத்தி முதலீடு செய்யும் போது தவறான வழிநடத்தல்கள், மூலம் பண இழப்பு அபாயங்கள் ஏற்படலாம். இது போன்ற விஷயங்களை தடுப்பதற்காகவே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications