செபி Ex-தலைவர் மாதபி பூரி புச் குற்றமற்றவர்.. Lokpal வெளியிட்ட பரபர அறிக்கை..!!

முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச் மீது வைக்கப்பட ஊழல் புகார்களை லோக்பால் அமைப்பு மொத்தமாக தள்ளுபடி செய்துள்ளது. லோக்பால் அமைப்பு என்பது, பிரதமர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் ஒரு முக்கியமான அமைப்பாகும். 2013-ம் ஆண்டு லோக்பால் மற்றும் லோகாயுக்தா சட்டத்தின் கீழ் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

லோக்பால் வெளியிட்டுள்ள 116 பக்க உத்தரவில், "எந்தவொரு தவறும் செய்யப்பட்டதற்கான ஒரு சிறு ஆதாரமும் இல்லை" மற்றும் புகார்கள் "முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டவை" என லோக்பால் தெளிவுபடுத்தியுள்ளது.

செபி Ex-தலைவர் மாதபி பூரி புச் குற்றமற்றவர்.. Lokpal வெளியிட்ட பரபர அறிக்கை..!!

அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பெர்க் வெளியிட்ட அறிக்கையில் முக்கிய திருப்பமாக செபி முன்னாள் தலைவர் மாதபி பூரி புச்-க்கு தொடர்பு இருப்பதாக அறிக்கை வெளியிட்டது. இந்த குற்றச்சாட்டுகளை மாதபி பூரி புச் திட்டவட்டமாக மறுத்த நிலையில் பல தரப்பினர் மாதபி பூரி புச் மீது பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டது. இந்த புகார்கள் அனைத்தையும் ஆய்வு செய்து மூன்று புகார்கள் மீது விசாரணை துவங்கியது லோக்பல். பெரும்பாலான புகார்கள் ஒரே மாதிரியானவை என லோக்பால் கண்டறிந்து 3 புகார்கள் அடிப்படையில் விசாரித்தது.

இந்த புகார்களின் முக்கிய ஆதாரமாக இருப்பது, ஆகஸ்ட் 10, 2024 அன்று ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கை. இந்த 3 புகார்களின் முழு விபரம்,

அதானி குழுமம் தொடர்பு: மாதபி பூரி புச், 2013-ல் ICICI வங்கியில் இருந்து விலகிய பிறகு, அகோரா அட்வைசரிஸ் பிரைவேட் லிமிடெட் (AAPL) என்ற நிறுவனத்தை தொடங்கினார். 2015-ல் அவர் மற்றும் அவரது கணவர் சுமார் 5 கோடி ரூபாயை குளோபல் டைனமிக் ஆபர்ச்சுனிட்டிஸ் ஃபண்டில் (GDOF) முதலீடு செய்தனர். இதன் முதலீட்டு அதிகாரியாக இருந்தவர் அதானி எண்டர்பிரைசஸ் இயக்குநர். அப்போது அதானி குழுமம் செபியின் பங்கு விலை மோசடி விசாரணையில் இருந்தது. 2017-ல் செபியில் முழுநேர உறுப்பினராக புச் நியமிக்கப்பட்ட போது, இந்த முதலீட்டை வெளியிடவோ அல்லது விசாரணைகளில் இருந்து விலகவோ இல்லை என புகார் எழுந்தது.

M&M மற்றும் வோக்ஹார்ட் பரஸ்பர நன்மை: மாதபி பூரி புச்சின் கணவர் M&M குழுமத்திடம் இருந்து ஆலோசனை கட்டணம் பெற்றதாகவும், வோக்ஹார்ட் மருத்துவமனையின் துணை நிறுவனமான கரோல் இன்ஃபோ சர்வீசஸிடம் இருந்து வாடகை பெற்றதாகவும் புகார் எழுந்தது. இவை செபியில் நிலுவையில் உள்ள விசாரணைகளை தள்ளுபடி செய்ய பெறப்பட்ட தொகை என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

ICICI ESOP லாபம்: 2017 முதல் 2024 வரை, செபி உறுப்பினராக இருந்த போது, புச் ICICI வங்கியின் ESOP-களில் இருந்து பெரிய லாபம் பெற்றதாகவும் புகார் எழுந்தது.

லோக்பால், இந்த புகார்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும், M&M தொடர்பாக குறிப்பிடப்பட்ட ஐந்து வழக்குகளில் மூன்று M&M-ஐ சார்ந்தவை அல்ல எனவும் தெளிவுபடுத்தியது.

நீதிபதி A.M.கான்வில்கர் தலைமையிலான ஆறு பேர் கொண்ட அமர்வு, இந்த புகார்கள் "கற்பனையான அனுமானங்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை" அடிப்படையாகக் கொண்டவை என உறுதி செய்தது. புச், அவரது கணவர் மற்றும் அகோரா அட்வைசரியின் வருமான வரி கணக்குகள் (ITRs) சட்டவிரோதமாக பெறப்பட்டு, இந்த புகார்களுக்கு அடிப்படையாக பயன்படுத்தப்பட்டதாக லோக்பால் கண்டறிந்தது.

"இது ஒரு பெரிய சதியாக சித்தரிக்கப்பட்டு, செபி நிர்வாகம், முழுநேர உறுப்பினர்கள், உயர் அதிகார குழு மற்றும் பல செபி அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை," என லோக்பால் உத்தரவில் கூறியது.

இதன் மூலம் மாதபி பூரி புச் மீதான ஊழல் புகார்களை லோக்பால் முற்றிலும் நிராகரித்துள்ளது. அதானி, M&M, வோக்ஹார்ட் மற்றும் ICICI தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என உறுதியாகியுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த புகார்கள், செபியின் மீதான நம்பிக்கையை குறைக்க முயற்சியாக இருக்கலாம் எனவும் லோக்பால் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+