ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் வழக்கில் அன்மோல் அம்பானிக்கு செபி ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது. அவருடன் ரிலையன்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை இடம் அதிகாரியாக இருந்த கிருஷ்ணன் கோபாலகிருஷ்ணனிடம் செபி ரூ.15 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அன்மோல் அம்பானி மற்றும் கோபாலகிருஷ்ணன் இருவரும் செபியின் LODR (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவை) விதிகளை மீறியுள்ளனர்.
கடந்த மாதம், இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, அனில் அம்பானிக்கு பங்குச் சந்தையில் ஈடுபடுவதை ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்தது. தற்போது அவரது மகன் அன்மோல் அம்பானிக்கும் அபராதம் விதித்துள்ளது. ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் விவகாரத்தில் பொது நோக்கத்திற்காக கார்ப்பரேட் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கும் போது உரிய விடாமுயற்சி பின்பற்றப்படவில்லை என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், அன்மோல் அம்பானிக்கு செபி ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது.

அதேபோல், ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை இடர் அதிகாரியாக இருந்த கிருஷ்ணன் கோபாலகிருஷ்ணனுக்கும் ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை 45 நாட்களுக்குள் செலுத்துமாறு இருவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிதியை திசை திருப்பியது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்டில், அனில் அம்பானி மற்றும் 24 பேருக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது செபி. அத்துடன் 25 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
அப்போது, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் குழுவில் இருந்த அன்மோல் அம்பானி, பொது நோக்கத்திற்கான கார்ப்பரேட் கடன்கள் மற்றும் ஜிபிசிஎல் கடன்களுக்கு ஒப்புதல் அளித்தார். இதனை தொடர வேண்டாம் என்று நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தெளிவான உத்தரவு இருந்தபோதிலும் அதனை மீறி செயல்பட்டதாக செபி தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 14, 2019 அன்று, அகுரா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு அன்மோல் அம்பானி ரூ.20 கோடி கடனாக ஒப்புதல் அளித்தார். பிப்ரவரி 11, 2019 அன்று நடைபெற்ற இயக்குநர்கள் குழு கூட்டம் GPCL க்கு அதிக கடன்களை வழங்க வேண்டாம் என்று நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட பிறகும் இது நடந்ததாகவும், இது நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குநராக, அன்மோல் அம்பானி நிறுவனத்தை தனது சொந்த திசையில் எடுத்துச் சென்று, இயக்குநராக தனது பங்கை மீறியதாகவும் சொல்லப்படுகிறது.
அம்பானியின் மகன் பங்குதாரர்களின் நலன்களுக்காகச் செயல்படவில்லை எனவும், உரிய கவனத்துடனும் விடாமுயற்சியுடனும் செயல்படவில்லை, நெறிமுறைகளை கடைபிடிக்கவில்லை என செபியின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் கேபிடல் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் குழுவில் இருந்த அன்மோல், மற்ற ரிலையன்ஸ் ஏடிஏஜி குழும நிறுவனங்களின் இயக்குநராக இருந்தவர், ஜிபிசிஎல் கடன் மற்றும் அடுத்தடுத்த கடன்களில் உரிய கவனம் செலுத்தவில்லை என்பதை அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
தற்போது, அனில் அம்பானியின் நிறுவனங்கள் சந்தையின் கவனத்தை ஈர்க்கும் நேரத்தில் புதிய முன்னேற்றங்கள் வந்துள்ளன. நேற்று, ரிலையன்ஸ் பவர் ரூ.1,525 கோடி மதிப்பிலான முன்னுரிமைப் பங்குகளை அனுமதித்துள்ளது. ரிலையன்ஸ் இன்ஃப்ரா கடந்த நாள் ரூ.6,014 கோடி முன்னுரிமை வெளியீட்டை அறிவித்தது. இவற்றில் ரிலையன்ஸ் கேபிடல் - ஹிந்துஜா குழும ஒப்பந்தமும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications