இந்தியாவின் முன்னணி வீட்டுக் கடன் சேவை நிறுவனங்களில் ஒன்றான பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தனது நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்து அதிகளவிலான முதலீட்டைத் திரட்ட முடிவு செய்தது.
இதன் படி இந்தியாவில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ உட்படப் பல முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள அமெரிக்காவின் கார்லைல் குரூப் நிறுவனம் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் 4000 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்ய அறிவித்தது..
ஆனால் இந்த முதலீட்டுத் திட்டத்திற்குத் தற்போது பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி தற்காலிகமாகத் தடை அறிவித்துள்ளது.
பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ்
பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிர்வாகம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்குடன் அதிக வாடிக்கையாளர்களுக்குக் கடன் அளிக்க வேண்டும் என்ற இலக்குடன் தனது பங்குகளை விற்பனை செய்து அதன் மூலம் முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டது.
4000 கோடி ரூபாய் முதலீடு
இத்திட்டத்தின் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் பங்குகள் மீது சுமார் 4000 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்ய அமெரிக்காவின் கார்லைல் குரூப் உடன் இதர பல நிறுவனங்களும் இணைந்து முதலீடு செய்ய முன்வந்தது.
செபி தற்காலிகமாகத் தடை
இந்த மாபெரும் திட்டத்திற்குப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி தற்காலிகமாகத் தடை அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் பங்குகள் சுமார் 5 சதவீதம் வரையில் சரிந்து லோவர் சர்கியூட் அளவீட்டை அடைந்துள்ளது.
பங்கு மதிப்பு தடாலடி உயர்வு
மே மாத துவக்கத்தில் வெறும் 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் பங்குகள் மே 31ஆம் தேதி கார்லைல் குருப் முதலீடு குறித்து வெளியான அறிவிப்பு மூலம் 925 ரூபாய் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தை அளித்தது.
பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் விளக்கம்
ஜூன் 16ஆம் தேதி பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட உத்தரவிற்குத் தற்போது பிஎன்பி நிர்வாகம் பங்குச்சந்தைக்கு விளக்கம் அளித்துள்ளது.
இந்த விளக்கத்தில் புதிய முதலீடு திட்டம் கைவிடப்படவில்லை என்பதை முதலீட்டாளர்களுக்குத் தெரிவித்துள்ளது பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ்.
நிர்ணயம் செய்யப்பட்ட விலை
பிஎன்பி நிர்வாகம் பங்குகளை 390 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது தவறு, விதிமுறை 164(1) படி பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் பங்குகளை 384.6 ரூபாய்க்குத் தான் விற்பனை செய்ய வேண்டும். எனவே நிர்வாகம் தகுதி நடவடிக்கை எடுக்க நிர்ணயம் செய்துள்ளது.
முதலீட்டாளர்கள் எண்ணிக்கை
பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் பங்குகள் 390 ரூபாய் விலையில் கார்லைல் குரூப், ப்ளூட்டோ இன்வெஸ்ட்மென்ட் இணைந்து 3,185 கோடி ரூபாயும், ஏற்கனவே இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள ares ssg, ஜெனரல் அட்லான்டிக் ஆகியோரும் இந்த முதலீட்டுச் சுற்றில் இணைந்து சுமார் 4000 கோடி ரூபாய் அளவிலான தொகை முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.
பிஎன்பி ஹவுசிங் பங்குகள் சரிவு
திங்கட்கிழமை வர்த்தகத்தில் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் பங்குகள் 5 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு பங்கு விலை 36.85 ரூபாய் வரையில் சரிந்து 700.95 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications