அஸ்மிதா படேல் பிரபலமான யூடியூபர். இவருக்கு யூ டியூப்பில் 5.20 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். மேலும் அஸ்மிதா படேல் குளோபல் ஸ்கூல் ஆஃப் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பங்குச் சந்தை பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அஸ்மிதா படேலின் குளோபல் ஸ்கூல் ஆஃப் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் பயிற்சி திட்டங்கள் என்ற பெயரில் சட்டவிரோத முதலீட்டு ஆலோசனை சேவைகள் வழங்குவதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியிடம் 42 மாணவர்கள் புகார் கொடுத்தனர்.

இதனையடுத்து செபி இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கியது. விசாரணையில் மாணவர்கள் அளித்த புகாரில் உண்மை இருப்பதை கண்டு பிடித்தது. அஸ்மிதா படேலின் கல்வி நிறுவனம் அங்கீகரிக்கப்படாத முதலீட்டு ஆலோசனைகளை வழங்கியதாகவும், விதிமுறைகளை மீறியதாகவும் செபி தீர்மானித்தது.
இதனையடுத்து, அஸ்மிதா படேல் நடத்தும் குளோபல் ஸ்கூல் ஆஃப் டிரேடிங் நிறுவனத்திடமிருந்து ரூ.53.67 கோடியை பறிமுதல் செய்தது. மேலும், பல்வேறு திட்டங்களுக்கான கட்டணமாக வசூலிக்கப்பட்ட மேலும் உள்ள ரூ.104.6 கோடியை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி அந்நிறுவனத்தை கேட்டுள்ளது.
2024 டிசம்பரிலும் செபி இது போன்ற ஒரு நடவடிக்கையை எடுத்தது. அப்போது சிக்கியது யூடியூபர் ரவீந்திர பாலு பாரதி மற்றும் அவரது ரவீந்திர பாரதி கல்வி நிறுவனமும். 2024 ஏப்ரல் 4ம் தேதி வரை செக்யூரிட்டிஸ் சந்தையிலிருந்து ரவீந்திர பாலு பாரதி மற்றும் அவரது நிறுவனத்தையும் தடை செய்தது. மேலும், பதிவு செய்யப்படாததாகக் கூறப்படும் முதலீட்டு ஆலோசனை வணிகத்திலிருந்து ஈட்டிய ரூ.9.5 கோடி சட்டவிரோத லாபத்தை திரும்ப கொடுக்கவும் உத்தரவிட்டது.
கடந்த ஜனவரி 30ம் தேதியன்று செபி வெளியிட்ட அறிவிப்பில், முதலீட்டாளர் கல்வியாக மாறுவேடமிடும் முதலீட்டு ஆலோசனையை தடுக்க, செல்வாக்கு செலுத்துபவர்கள் தங்கள் உள்ளடக்கத்தில் live prices பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் கூட நேரடி அல்லது மறைமுக தொடர்புக்காக செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு பணம் கொடுக்க முடியாது. இந்த விதிமுறை 2024 ஆகஸ்ட் 29ம் தேதி முதல் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications