இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEBI, அமெரிக்காவைச் சேர்ந்த ஹைய் ஃப்ரீக்வென்சி வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட்டுக்கு (Jane Street) மீண்டும் இந்திய சந்தையில் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்துள்ளது. பல மாத ஆய்வுக்கு பின்பு செபி இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய கூடாது என தடை விதித்த நிலையில் தற்போது மீண்டும் அனுமதி கொடுக்க என்ன காரணம்..?
ஜேன் ஸ்ட்ரீட் முறைகேடாக வர்த்தகம் செய்தது மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் லாபமாக பெற்றது உறுதியான நிலையில் செபி ரூ.4,844 கோடி தொகையை அபராதம் விதித்தது. இந்த முடிவை ஏற்ற ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் ரூ.4,844 கோடியை ஒரு escrow கணக்கில் சில நாட்களிலேயே செலுத்திய நிலையில், செபி மீண்டும் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனுமதி கொடுத்துள்ளது.

ராய்டர்ஸ் செய்தியின்படி, ஜேன் ஸ்ட்ரீட்டின் இந்த அனுமதியை சில நிபந்தனைகளுடன் விதித்துள்ளது. SEBI ஜூலை 18-ஆம் தேதி இந்நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், ரூ.4,844 கோடி செலுத்தப்பட்டதால், இடைக்கால உத்தரவில் விதித்த கட்டுப்பாடுகள் இனி பொருந்தாது, நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால்,ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் ஆப்ஷன்ஸ் மார்க்கெட்டில் வர்த்தகம் செய்ய கூடாது என்று SEBI-க்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், பண சந்தையில் வர்த்தகம் செய்யவும் ஜேன் ஸ்ட்ரீட் விரும்பவில்லை. இதனால் ஜேன் ஸ்ட்ரீட் இந்திய சந்தையில் அதிரடியாக தனது வர்த்தகத்தை துவங்காது என தெரிகிறது.
ஜேன் ஸ்ட்ரீட் கடந்த ஆண்டு இந்திய சந்தையில் செய்யப்பட்ட முதலீட்டிலும், வர்த்தகத்தின் வாயிலாக சுமார் 32,681 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளதாக செபி கணக்கிட்டுள்ளது.
ஜேன் ஸ்ட்ரீட், அதிவேக அல்காரிதங்களைப் பயன்படுத்தி, நொடிகளில் கோடிக்கணக்கான வர்த்தகங்களை செய்கிறது. எடுத்துக்காட்டாக, நிஃப்டி-50 குறியீடு சிறிது உயரும் என ஆப்ஷன் சந்தையில் பெட்டிங் வைத்தால், இக்குறியீட்டில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை இந்த நிறுவனமே ரெகுலர் மார்க்கெட்டில் வாங்கி செயற்கையாக குறியீட்டை உயர்த்துகிறது. இந்த சிறு மாற்றம், அதிக லெவரேஜ் கொண்ட டெரிவேட்டிவ்ஸ் சந்தையில் பெரும் லாபத்தை அளிக்கிறது.
SEBI-யின் முதல்கட்ட ஆய்வில் ஜேன் ஸ்ட்ரீட், BANKNIFTY குறியீட்டில் முறையற்ற வகையில் முதலீடு செய்து, தனது பண பலத்தால் உயர்த்தியும், இறக்கியும் பெரும் லாபம் பெற முறைகேடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து தான் ஜூலை 3-ஆம் தேதி, SEBI இந்நிறுவனத்தை இந்திய சந்தையில் பங்குகளை வாங்கவோ விற்கவோ தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவு, ஜேன் ஸ்ட்ரீட் 2023 ஜனவரி முதல் 2025 மே வரை நடத்திய விசாரணையில், பண சந்தை, ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் மார்க்கெட்டுகளில் ஒரே நேரத்தில் பெட்டிங் வைத்து முக்கிய பங்குச்சந்தை குறியீடுகளை திசைதிருப்பி அதிக லாபத்தை பெற்றது கண்டறிந்தது செபி.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications