இந்தியாலில் ஐபிஓ முதலீட்டு சந்தை சூடுப்பிடித்துள்ளது, சில நாட்களுக்கு முன்பு ஐபிஓ வெளியிட்ட ட்ரோன் நிறுவனமான ஐடியாபோர்ஜ் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ விண்ணப்பத்திற்கு செபி ஒப்புதல் கொடுத்து முதலீட்டாளர்கள் மத்தியில் ஐபிஓ மீதான ஈடுப்பாட்டை அதிகரிக்க தூண்டியது.
இந்த நிலையில் இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி ஐபிஓ வெளியிடும் நிறுவனங்களின் பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான காலக்கெடுவை தற்போது நடைமுறையில் இருக்கும் 6 நாட்களுக்குப் பதிலாக, ஐபிஓ முடியும் நாளில் இருந்து 3 நாட்களுக்குள் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடும் நடைமுறையை செபி கொண்ட வர ஒப்புதல் அளித்துள்ளது.

செபி அறிவித்துள்ள இந்த T+3 நாட்களின் காலக்கெடு இரண்டு கட்டங்களில் நடைமுறைக்கு வரும். புதிய ஐபிஓ லிஸ்டிங் காலக்கெடு, செப்டம்பர் 01, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு திறக்கப்படும் அனைத்துப் ஐபிஓ-களுக்கு நிறுவனங்கள் 3 நாட்களா, 6 நாட்களா என்பதை தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் டிசம்பர் 01, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு வரும் அனைத்து ஐபிஓ நிறுவனங்களின் issue காலம் முடிந்த 3 நாட்களில் listing என்பது அடிப்படையாக அறிவித்து கட்டாயமாக்கப்பட உள்ளது. செபி மே மாதமே இதுக்குறித்து ஆய்வு அறிக்கை வெளியிட்டதன் பெயரில் ஐபிஓ லிஸ்டிங் காலத்தை T+6 நாட்களை, T+3 ஆக குறைக்கப்பட உள்ளது. இந்த மாற்றம் முதலீட்டாளர்களும், நிறுவனங்களுக்கு பலன் அளிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, செபி ஐபிஓ கட்டமைப்பையும், நிறுவனங்கள் ஐபிஓ விண்ணப்பம், Draft Red Herring Prospectus (DRHP) தாக்கல் செய்யும் செயல்பாடுகளை எளிதாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் விளைவாக பல நிறுவனங்கள், பல துறையில் இருந்து ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது.
புதன்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 64050.44 என்ற புதிய வரலாற்று உச்ச அளவை எட்டியுள்ளது. இதேவேளையில் நிஃப்டி குறியீடு 19,011.25 புள்ளிகளை முதல் முறையாக தொட்டு அசத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications