செபி அதிகாரிகள், அதன் தலைவர் மாதபி பூரி புச்சிற்கு எதிராக போர் கோடி தூக்கியுள்ளனர். அதிகப்படியான கண்காணிப்பு, அதிக்கப்படியான இலக்குகள் மற்றும் மோசமான செயல்பாடுகள் ஆகியவற்றால் வேலை கலாச்சாரம் குறித்து குற்றம் சாட்டியுள்ளனர். அதிக சம்பளம் இருந்தபோதிலும், ஊழியர்களுக்கு அதிகரித்த மன அழுத்தம் மற்றும் பயத்தை மேற்கோள் காட்டி, மாற்றங்களை எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கிடையில் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியுற்றதால், இந்த கோரிக்கைகளை செபி நிராகரிததுள்ளது
செபி அதிகாரிகள், கிரேடு ஏ நுழைவு மட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 34 லட்சத்தில் இருந்து சம்பளம் பெறுகிறார்கள். தங்கள் முதலாளிக்கு எதிராக புகார் அளித்தது மட்டுமல்லாமல், பணி கலாச்சாரத்தை நச்சுத்தன்மையுடையதாக மாற்றியதற்காக அவர் ராஜினாமா செய்யக் கோரி போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். இதனால் மாதபி பூரி புச்சிற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஊழியர்கள் கடந்த 2-3 ஆண்டுகளாக வேதனை அனுபவித்த வேளையில், தற்போது போராட்டம் வெடித்துள்ளது. வேலையில் ஊழியர்கள் தங்களின் விரக்தியின் வெளிப்பாடாகவே இந்த போராட்டம் என்று செபி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மனஉளைச்சலை ஏற்படுத்தினாலும், சமீப காலங்களில், உயர் நிர்வாகத்தின் அணுகுமுறையில் அதன் ஊழியர்களை அணுகும் விதத்திலும், அவர்களுடன் நடந்துகொள்ளும் விதத்திலும் டெக்டோனிக் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று தலைப்பிட்ட கடிதத்தில், செபி அதிகாரிகளின் குறைகள் மற்றும் அவர்களை அழைக்கும் விதம், மரியாதை குறித்து நிதி அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்தக் கடிதத்தில் கிரேடு ஏ மற்றும் அதற்கு மேற்பட்ட (உதவி மேலாளர் மற்றும் அதற்கு மேல்) உள்ள 1,000 அதிகாரிகளில் பாதி பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
HRA-வில் 55% உயர்வு கோரிய ஊழியர்கள், தங்களது முந்தைய போராட்டம் எந்த பலனையும் தராததால், அதை வேலை கலாச்சாரம் பிரச்சனையாக மாற்றும் வகையில் கதையை திரித்ததாக கூறி இந்த குற்றச்சாட்டுகளை செபி நிராகரித்துள்ளது.
செபி அதிகாரிகள் ஏற்கனவே நல்ல ஊதியம் பெற்று வரும் வேளையில் மேலும் ஏ பிரிவில் உள்ள நுழைவு நிலை அதிகாரிகளுக்கு, நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ. 34 லட்சம் செலவிடுவதாகவும், இது கார்ப்பரேட் துறையுடன் கூட மிகவும் சாதகமாக ஒப்பிடப்படுகிறது. எனவே அவர்கள் முன்வைக்கும் புதிய கோரிக்கைகள் கூடுதல் தொகையாக இருக்கும் எனவும் செபி எதிர்பார்துள்ளது. தற்போதைய CTC ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ. 6 லட்சம் என்றும் கூறியுள்ளது.
செபி ஊழியர்களின் பிரச்சனைகள்:
1) நிமிடத்திற்கு நிமிடம் ஊழியர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவதாகவும், ஊழியர்கள் பெயர் கூறி அழைக்கப்படுவதாகவும், சில நேரங்களில் நிர்வாகத்திற்கு தெரியாமல் திட்டப்படுவதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சமீப காலங்களில் இந்த வகையான பணிச்சூழல் செபியின் ஊழியர்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மன அழுத்தம் மற்றும் நச்சுப் பணிச்சூழலை விளைவித்துள்ளதாக கூறப்படுகிறது
2) மகிழ்ச்சியாகவும் திறமையாகவும் பணிபுரியும் இடமாக இருந்த செபி, நம்பத்தகாத KRA இலக்குகளுக்கு உலை ஆகிவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஆண்டிற்கான KRA இலக்குகள் சில துறைகள் மற்றும் பிரிவுகளுக்கு 20%-50% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் புள்ளிகள் அடிப்படையிலான KRA அமைப்புகள் கோல் போஸ்ட்களை மாற்றுவதன் மூலம் நம்பத்தகாத இலக்குகளைக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதற்கு முன்பு மிகக் குறைவான பார்வையாளர்களைக் கொண்டிருந்த செபியின் ஊழியர்களுக்கான மனநல ஆலோசகர் இப்போது மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஊழியர்களால் அதிக சுமைக்கு ஆளாகியுள்ளதாகவும், இதன் விளைவாக, HRD வருகை நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது என்றும் இது ஊழியர்களுக்கும் அதிகபட்ச மனநல ஆலோசனைகளைத் பெற வேண்டியிருந்தது கூறியுள்ளது.
3) HRD மற்றும் ITD போன்ற சில துறைகளுக்கு எதிராக ஊழியர்களை நிறுத்த முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது சிலரின் இந்த அணுகுமுறை செபியின் நீண்டகால கலாச்சாரத்தை அழிக்க மட்டுமே முயல்வதாகவும் இந்த இரண்டு துறைகளும் பெரும் அழுத்தத்தின் கீழ் செயல்படுவதாவும் கூறப்பட்டுள்ளது. மேலும் செபியின் அனைத்து ஊழியர்களும் அவர்களுடன் பரிவு காட்டுவதாக கூறப்படுகிறது.
4) கடந்த 2-3 வருடங்களாக பயம்தான் செபியின் முதன்மையான உந்து சக்தியாக மாறியுள்ளது என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். உயர் மட்டத்தில் உள்ளவர்கள் கூச்சலிடுவதும், திட்டுவதும், பகிரங்கமாக அவமானப்படுத்துவதும் கூட்டங்களில் வழக்கமாகி விட்டது என்றும் ஏ-சி கிரேடு அதிகாரிகள் ஒருபுறம் இருக்க, உயர் தரத்தில் உள்ள அதிகாரிகள் கூட உயர் மட்டத்தில் உள்ளவர்களின் சந்தேகத்திற்கு இடமின்றி மோசமான நடத்தைக்கு பயந்து கூட்டங்களில் கலந்துகொள்ள பயப்படுவதாகவும் கூறப்படுகிறது
5) வருகையைக் கண்காணிப்பதற்கான தடைகள், ஊழியர்களின் மீதான நம்பிக்கையின்மையைக் காட்டுவதாகக் கூறிய செபி அதிகாரிகள், மற்றொரு வேதனையான புள்ளியை முன்வைத்துள்ளனர். இது ஊழியர்களின் மீதான அவநம்பிக்கையை காட்டுவதாகவும், ஊழியர்களின் நாள் வருகையைக் கண்காணிக்க ஸ்விங் தடைகளை நிறுவுவதாகும் அந்த கடிதத்தில் கூறியுள்ளனர். மேலும் ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications