இந்தியாவின் டிஜிட்டல் யுகத்தில், சமூக ஊடகங்கள் மற்றும் பிரபலங்கள் மூலம் பரப்பப்படும் நிதி ஆலோசனைகள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், இந்த செல்வாக்குமிக்க நபர்களால் பரப்பப்படும் தவறான தகவல்கள், முதலீட்டாளர்களை ஏமாற்றி, பெரும் பொருள் இழப்பிற்கு வழிவகுத்து வருகிறது.
இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு, இந்திய பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) நிதி செல்வாக்கு நபர்கள் (Finfluencers) மூலம் பரப்பப்படும் தவறான தகவல்களை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகளை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். அறிவித்துள்ளது.

இதன் நீட்சியாக இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEBI, நாட்டில் Finfluencers மீதான தனது நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை வெளியான அறிவிப்பில் 'பாப் ஆஃப் சார்ட்' (Baap of Chart) என்ற புனைப்பெயரில் அறியப்பட்ட முகமது நசிருதீன் அன்சாரி உள்ளிட்ட ஏழு நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஒரு வருடத்திற்கு பங்குச்சந்தை தொடர்பான விவகாரத்தில் பங்குபெற தடை விதித்துள்ளது.
இந்த 7 பேரில் நசிருதீன் அன்சாரி உடன் ராகுல் ராவ் பதமடி, தப்ரைஸ் அப்துல்லா, ஆசிப் இக்பால் வானி, கோல்டன் சிண்டிகேட் வென்ச்சர்ஸ் ப்ரைவேட் லிமிடெட், மன்ஷா அப்துல்லா மற்றும் ஜாதவ் வம்சி ஆகியோரும் அடங்குவர். மேலும் இந்த 7 உறுப்பினர்களும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் முதலீட்டாளர்களுக்கு மொத்தம் ரூ.17.2 கோடி திருப்பித் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
'பாப் ஆஃப் சார்ட்' என்ற பெயரில் சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் செயல்படும் அன்சாரி, பங்குச் சந்தையில் பங்குகளை வாங்க/விற்பனை பரிந்துரைகளை வழங்கி வருகிறார். இந்த பரிந்துரைகள் பங்குச் சந்தையைப் பற்றிய பயிற்சி திட்டங்களின் ஒரு பகுதியாக வழங்கப்பட்டதாக SEBI குற்றம்சாட்டியுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகளுக்கு கூடுதலாக, SEBI அன்சாரி மீது ரூ.20 லட்சம் அபராதமும், மற்ற நிறுவனங்கள் மீது தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
SEBI-யின் முழுநேர உறுப்பினர் அமர்ஜீத் சிங், அன்சாரி போன்ற பதிவு செய்யப்படாத முதலீட்டு ஆலோசகர்களால் ஏற்படக்கூடிய சாத்தியமான தீங்குகள் குறித்து கடுமையான கவலை தெரிவித்தார். Finfluencers-கள் சரியான சான்றிதழ் இல்லாமல், இந்த நபர்கள் முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தி, பெரும் ஆபத்தில் தள்ளி வருகின்றனர் என்று வலியுறுத்தினார். இந்தியாவின் டிஜிட்டல் யுகத்தில், சமூக ஊடகங்கள் மற்றும் பிரபலங்கள் மூலம் பரப்பப்படும் நிதி ஆலோசனைகள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், இந்த செல்வாக்குமிக்க நபர்களால் பரப்பப்படும் தவறான தகவல்கள், முதலீட்டாளர்களை ஏமாற்றி, பெரும் பொருள் இழப்பிற்கு வழிவகுத்து வருகிறது.
இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு, இந்திய பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) நிதி செல்வாக்கு நபர்கள் (Finfluencers) மூலம் பரப்பப்படும் தவறான தகவல்களை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகளை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். அறிவித்துள்ளது.
இதன் நீட்சியாக இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEBI, நாட்டில் Finfluencers மீதான தனது நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை வெளியான அறிவிப்பில் 'பாப் ஆஃப் சார்ட்' (Baap of Chart) என்ற புனைப்பெயரில் அறியப்பட்ட முகமது நசிருதீன் அன்சாரி உள்ளிட்ட ஏழு நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஒரு வருடத்திற்கு பங்குச்சந்தை தொடர்பான விவகாரத்தில் பங்குபெற தடை விதித்துள்ளது.
இந்த 7 பேரில் நசிருதீன் அன்சாரி உடன் ராகுல் ராவ் பதமடி, தப்ரைஸ் அப்துல்லா, ஆசிப் இக்பால் வானி, கோல்டன் சிண்டிகேட் வென்ச்சர்ஸ் ப்ரைவேட் லிமிடெட், மன்ஷா அப்துல்லா மற்றும் ஜாதவ் வம்சி ஆகியோரும் அடங்குவர். மேலும் இந்த 7 உறுப்பினர்களும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் முதலீட்டாளர்களுக்கு மொத்தம் ரூ.17.2 கோடி திருப்பித் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
'பாப் ஆஃப் சார்ட்' என்ற பெயரில் சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் செயல்படும் அன்சாரி, பங்குச் சந்தையில் பங்குகளை வாங்க/விற்பனை பரிந்துரைகளை வழங்கி வருகிறார். இந்த பரிந்துரைகள் பங்குச் சந்தையைப் பற்றிய பயிற்சி திட்டங்களின் ஒரு பகுதியாக வழங்கப்பட்டதாக SEBI குற்றம்சாட்டியுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகளுக்கு கூடுதலாக, SEBI அன்சாரி மீது ரூ.20 லட்சம் அபராதமும், மற்ற நிறுவனங்கள் மீது தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
SEBI-யின் முழுநேர உறுப்பினர் அமர்ஜீத் சிங், அன்சாரி போன்ற பதிவு செய்யப்படாத முதலீட்டு ஆலோசகர்களால் ஏற்படக்கூடிய சாத்தியமான தீங்குகள் குறித்து கடுமையான கவலை தெரிவித்தார். Finfluencers-கள் சரியான சான்றிதழ் இல்லாமல், இந்த நபர்கள் முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தி, பெரும் ஆபத்தில் தள்ளி வருகின்றனர் என்று வலியுறுத்தினார்.

Click it and Unblock the Notifications