இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அதானி குழுமத்தின் ரத்து செய்யப்பட்ட 20000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு விற்பனையில் பங்குபெற்ற சில ஆங்கர் முதலீட்டாளர்களை விசாரித்து வருகிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் முன்னணி தொழில்துறை குழுமங்களில் ஒன்றாக இருக்கும் அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் ரிசர்வ் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழுமத்திற்கு மட்டும் அல்லாமல், மோடி அரசுக்கும் பல நெருக்கடி உருவாகியுள்ளது.
இந்த நிலையில் மத்திய கார்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் பிரதமர் மோடி அலுவலகத்தில் கொடுத்த விளக்கத்தின் படி செபி விசாரணை துவங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் தனது செய்தியில் குறிப்பிட்டு உள்ளது.
அதானி குழுமம்
அதானி குழுமத்தின் ரத்துச் செய்யப்பட்ட 20000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு விற்பனையில் இடம்பெற்ற சில முதலீட்டாளர்கள் குறிப்பாக ஆங்கர் முதலீட்டாளராக இருந்தவர்கள் மீது செபி விசாரணை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
செபி
இந்த விசாரணையில் செபி இந்தியப் பத்திரச் சட்டங்களை மீறுவது அல்லது பங்கு விற்பனைச் செயல்பாட்டில் ஏதேனும் முரண்பாடுகள் உள்ளதா என ஆய்வு செய்து வருவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
மொரீஷியஸ்
மொரீஷியஸ் நாட்டைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களான கிரேட் இன்டர்நேஷனல் டஸ்கர் ஃபண்ட் மற்றும் ஆயுஷ்மத் லிமிடெட் ஆகியவை 20000 கோடி ரூபாய் FPO திட்டத்தில் ஆங்கர் முதலீட்டாளர்களாக இடம்பெற்றனர்.
என்ன தொடர்பு
தற்போது செபி, அதானிக்கும் இந்த இரு ஆங்கர் முதலீட்டாளர்களுக்கும் இடையேயான தொடர்புகளை ஆய்வு செய்து விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்தியாவின் கேப்பிடல் மற்றும் disclosure விதிகள் படி நிறுவனத்தின் நிறுவனர் அல்லது நிறுவனர் குழும நிறுவனங்கள் உடன் தொடர்புடைய நிறுவனங்கள் ஆங்கர் முதலீட்டாளார் இடம்பெற கூடாது. இந்த விசாரணையில் இவ்விரு ஆங்கர் முதலீட்டாளார்கள் அதானி குழும நிறுவனங்கள் உடன் தொடர்புடையதா என ஆய்வு செய்து வருகிறது.
10 முதலீட்டு வங்கிகள்
இதேபோல் செபி கண்காணிப்பில் கிரேட் இன்டர்நேஷனல் டஸ்கர் ஃபண்ட் மற்றும் ஆயுஷ்மத் லிமிடெட் மட்டும் அல்லாமல், பங்கு வழங்குவதில் இடம்பெற்ற 10 முதலீட்டு வங்கிகளில் எலாரா கேபிடல் மற்றும் மோனார்க் நெட்வொர்த் கேபிடல் ஆகிய இரு நிறுவனங்களையும் ஆய்வு செய்து வருகிறது. இவ்விரு நிறுவனங்கள் மீது Share Offering-ல் விதிமுறை மீறப்பட்டு உள்ளதா என்று விசாரிக்கப்பட்டு வருவதாகப் பெயர் வெளியிட விரும்பாத சிலர் ராய்ட்டர்ஸ்-க்கு தெரிவித்துள்ளனர்.
எலாரா கேபிடல்
இதில் முக்கியமாக எலாரா கேபிடல் தனது மொத்த சந்தை மதிப்பீட்டில் 99 சதவீதத்தை அதானி குழுமத்தின் 3 நிறுவன பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு உள்ளதாக ஹிண்டன்பர்க் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதானி குழும விளக்கம்
அதானி குழுமம் இவ்விரு நிறுவனத்தைப் பற்றிக் கூறுகையில் மொனார்க் நிறுவனத்தின் "நற்சான்றிதழ்கள் மற்றும் சில்லறை சந்தையில் கொள்ளும் திறனுக்காக" முந்தைய பங்கு விற்பனைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. இதேபோல் எலாரா குறித்துக் கூறுகையில் அதானி நிறுவனத்துடன் எந்த வகையிலும் தொடர்புடையது என்றால் அது தவறானது என்று தெரிவித்துள்ளது.
மோடி அலுவலகம்
இந்திய வணிகங்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தைச் சார்ந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி அலுவலக அதிகாரிகளுக்குக் கார்ப்பரேட் விவகார அமைச்சக அதானி குழுமம் தகவல் அளித்ததுள்ளதாகவும், செபியுடன் தொடர்பில் இருப்பதாக அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ்-க்கு தெரிவித்துள்ளனர்.
செபி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகம்
பிரதமர் மோடி அலுவலகத்தில் செபி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சக மத்தியில் நடந்த விவாதங்களின் விவரங்கள் ராய்ட்டர்ஸ்-க்கு தெரியவில்லை. இதேபோல் அதானியின் கடந்த கால நிதிநிலை அறிக்கைகள் மீதான மதிப்பாய்வை கார்ப்பரேட் விவகார அமைச்சக பிப்ரவரி 2 அன்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications