இந்திய முதலீட்டு சந்தையில் தவறிழைப்பவர்கள், மோசடி செய்பவர்களிடமிருந்து அபராதத்தை முழுமையாக வசூலிக்கும் நோக்கத்துடன், பங்குசந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி இன்று மோசடி செய்பவர்களின் சொத்துகள் குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு 20 லட்சம் வரை வெகுமதி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெகுமதி இரண்டு நிலைகளில் வழங்கப்படும், இடைக்கால மற்றும் இறுதியில் அளிக்கப்பட உள்ளது.
அதாவது தகவலை உறுதி செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு நேரத்தில் ஒரு பகுதியும், விசாரணை இறுதியில் அடுத்த பகுதியில் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெகுமதி
இடைக்கால வெகுமதி தொகையானது, சொத்தின் கையிருப்பு விலையில் இரண்டரை சதவிகிதம் அல்லது 5 லட்சம் ரூபாய், எது குறைவாக இருக்கிறதோ அதை அளிக்கப்படும். இறுதி வெகுமதித் தொகை மீட்கப்பட்ட நிலுவைத் தொகையில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்காது அல்லது 20 லட்சம் ரூபாய் இதில் எது குறைவாக இருக்கிறதோ அது.
செபி
செபி-யின் மீட்டெடுப்பு நடவடிக்கைகளின் கீழ் கடனை செலுத்தாதவரின் சொத்துக்கள் பற்றிய நம்பகமான தகவலை வழங்கும் நபருக்குவெகுமதி வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்ட செபி, தகவல் அளிப்பவர் மற்றும் வெகுமதி விபரங்களை ரகசியமாக வைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
அபராதம்
செபியின் அறிவிப்பின் படி அபராதம் வசூலிப்பதில் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது என சான்றளிக்கப்பட்ட கணக்கின் நிலுவைத் தொகைகள் தொடர்பான சொத்துக்கள் குறித்தும், அதன் மீதான தொடர்பு குறித்த தகவலை வழங்கினால் மட்டுமே, வெகுமதிக்கு தகுதியான கருதப்படுவார்கள்.
515 கணக்குகள்
அபராத தொகையை மீட்க அனைத்து வழிகளையும் பயன்படுத்தியும் தோல்வி அடைந்த கணக்குகள் என பட்டியலிடப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே இது பொருந்தும். மேலும் செபி இதுவரை 515 கணக்குகளை இப்பட்டியலில் வைத்துள்ளது, இதுக்குறித்து தகவல்களை அளிப்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரையில் பெற முடியும்.
67,228 கோடி ரூபாய் நிலுவை
2021-22 ஆம் ஆண்டிற்கான செபியின் ஆண்டறிக்கையின்படி, மார்ச் 2022 இறுதியில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டாளர் 67,228 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை "மீட்டெடுப்பது கடினம்" (டிடிஆர்) பிரிவின் கீழ் பிரித்துள்ளது. இந்த தொகையை மீட்டுக்கும் முயற்சியில் தான் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications