செபியின் அறிவிப்பால் இனி பங்கு தரகு கட்டணங்கள் அதிகரிக்கலாம்.. முதலீட்டாளர்கள் நிலை?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்கு சந்தையின் வளர்ச்சிக்காகவும், முதலீட்டாளர்களின் நலன்களுக்காகவும், பத்திர சந்தையினை ஒழுங்குபடுத்துதல் என பல்வேறு பணிகளை " இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் - செபி" செய்து வருகின்றது.

 

குறிப்பாக பங்கு சந்தையில் பங்குத் தரகர்கள், துணை தரகர்கள், போர்ட்ஃபோலியோ மேலாளர்கள், முதலீட்டு ஆலோசகர்கள், பங்கு பரிமாற்ற முகவர்கள் பிற தொடர்புடைய நபர்களுக்குப் பணியை கண்காணித்து வருகின்றது. மொத்தத்தில் முதலீட்டாளர்களின் நலன்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

வாடிக்கையாளர்களுக்கு பலன்

வாடிக்கையாளர்களுக்கு பலன்

அந்த வகையில் தற்போது ஒரு புதிய விதியினை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நலன்கள் பாதுகாக்க உதவிகரமான இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விதிமுறைகளின் படி, தரகு நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் தங்களது டீமேட் கணக்கில் பயன்படுத்தாத தொகையை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு திரும்ப செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.

முதல் வெள்ளியில் திரும்ப செலுத்த வேண்டும்

முதல் வெள்ளியில் திரும்ப செலுத்த வேண்டும்

இவ்வாறு திரும்ப செலுத்தப்படும் தொகையானது ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அல்லது ஒவ்வொரு காலாண்டின் முதல் வெள்ளிக்கிழமையன்று அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளது. இதனை வாடிக்கையாளர்களின் தேர்வுக்கு ஏற்ப அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் டிரேடிங் அக்கவுண்டுகளில் பணம் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்படும்.

பாதுகாப்பு
 

பாதுகாப்பு

இதன் மூலம் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பணம் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்படும். கடந்த ஜூலை மாதம் செபி ஒரு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என செபி தெரிவித்துள்ளது.

செலவு அதிகரிக்கலாம்

செலவு அதிகரிக்கலாம்

இது குறித்து தரகு நிறுவனமான ஜெரோதா-வின் நிறுவனம் நிதின் காமத், அடுத்து சில ஆண்டுகளில் அனைத்து ஒழுங்குமுறை மாற்றங்களால் தரகு கட்டணங்கள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர் சார்பில் இருந்து பார்க்கும்போது இது நல்ல மாற்றம் தான். எனினும் இது தரகு நிறுவனகளுக்கான செலவினங்களையும் அதிகரிக்க வழிவகுக்கலாம். இதன் காரணமாக கட்டணமும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sebi செபி
English summary

Sebi's new rule may increase brokerage cost

According to SEBI's new rule, brokerage firms will have to pay the unused amount in their Demat account back to the customer's bank account on the first Friday of every month (a) quarter.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X