இந்தியப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEBI, ஆல்கோ டிரேடிங் தளமான டிரேட்டிரான் (TradeTron) உடன் தொடர்புடைய 120க்கும் மேற்பட்ட ஸ்டாக் ப்ரோக்கர் நிறுவனங்களுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது போன்ற தொடர்புகளை நிறுத்துவதாக ஸ்டாக் ப்ரோக்கர் நிறுவனங்கள் முந்தைய செபி உத்தரவுக்கு உறுதியளித்தபோதிலும், விதிமுறை கொண்டு வந்த பின்பும் மோதிலால் ஒஸ்வால், ஜெரோதா மற்றும் 5பைசா கேபிட்டல் போன்ற முக்கிய ப்ரோக்கரேஜ் நிறுவனங்கள் இந்த குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளன.

டிரேட்டிரான் என்பது ஒரு ஆல்கோ டிரேடிங் தளம், இந்தளத்தில் முதலீட்டாளர்களுக்கு உறுதியான லாபம் கிடைக்கும் என்ற உத்தரவாதத்துடன் ஐடியாக்களையும் ஸ்டிராடர்ஜி-களையும் காட்டி வந்தது. இது பங்குச்சந்தை விதிமுறைக்கு முற்றிலும் புறம்பானது என்பதால் டிரேட்டிரான் மற்றும் பிற ஆல்கோ தளங்களின் மீதான SEBIயின் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் செபி அமைப்பு 2022ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில், நிச்சயமாக லாபம் அளிக்கும் என உறுதியளிக்கும் ஆல்கோ டிரேடிங் உக்திகளை காட்டும் அமைப்புகள் உடன் ப்ரோக்கரேஜ் நிறுவனங்கள் எவ்விதமான தொடர்பை வைத்திருக்கக் கூடாது என்று உத்தரவிட்டு இருந்தது.
டிரேட்டிரான் உடன் தங்கள் APIகளை ஒருங்கிணைத்து வைத்திருப்பதன் மூலம் இந்த விதிமுறைகளை மீறியதாக 122 பிரோக்கரேஜ் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது, செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதன் அடிப்படையில் SEBI நோட்டீஸ் பெற்ற ஸ்டாக் ப்ரோக்கர்களின் பட்டியலில் அதித்யா பிர்லா மணி, அரிஹந்த் கேபிட்டல் மார்க்கெட்ஸ், ஆனந்த் ரதி, ஏஞ்சல் ஒன், அஷிகா ஸ்டாக் புரோக்கிங், போனான்சா போர்ட்ஃபோலியோ, சாய்ஸ் எக்விட்டி புரோக்கிங், ஜியோஜிட் ஃபைனான்சியல் சர்வீசஸ், HDFC செக்யூரிட்டீஸ், ஹெம் செக்யூரிட்டீஸ், ICICI செக்யூரிட்டீஸ், IIFL செக்யூரிட்டீஸ், JM ஃபைனான்சியல் சர்வீசஸ், கேடியா கேபிட்டல் சர்வீசஸ், கோட்டக் செக்யூரிட்டீஸ், மாஸ்டர் கேபிட்டல் சர்வீசஸ், பேத்திம் மணி, ஃபிலிப் கேபிட்டல், ப்ராஃபிட்மார்ட் செக்யூரிட்டீஸ், பிரபுதாஸ் லில்லாத்ஹர், சாம்கோ செக்யூரிட்டீஸ், SMC குளோபல் செக்யூரிட்டீஸ், ஷேர்கான், ஸ்வாஸ்திகா இன்வெஸ்ட்மார்ட், டிரேட்ஜினி ஃபைனான்சியல் சர்வீசஸ் மற்றும் பல உள்ளன.
SEBI நோட்டீஸ் அனுப்புவது மூலம் ஆல்கோ டிரேடிங் முறைக்குப் பெரிய அடியாக விளங்குகிறது, மேலும் செபி நோட்டீஸ் அனுப்பப்பட்ட 122 ப்ரோகரேஜ் நிறுவனங்கள் மீது எவ்விதமான நடவடிக்கை எடுக்கும் என்பது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
டிரேட்ரான் என்றால் என்ன?: டிரேட்ரான் என்பது பல சொத்துக்கள், பல நாணயங்கள், பல பரிவர்த்தனைகளைச் செய்யும் ஒரு ஆல்கோ டிரேடிங் பிளாட்பார்ம் ஆகும். இந்த தளத்தின் மூலம் ஒவ்வொரு முதலீட்டாளரும் சொந்தமாகக் கணக்குகளை உருவாக்கி தங்களுக்கான அல்காரிதம் அடிப்படையில் தானாக டிரேடிங் செய்யும் ஒரு முறையை உருவாக்க முடியும். இத்தகைய வர்த்தகத்திற்கு நமக்குத் தேவையான கண்டிஷன் மற்றும் பொசிஷன்களை உருவாக்க முடியும்.
ஆல்கோ டிரேடிங் என்றால் என்ன?: அல்காரிதமிக் டிரேடிங் என்பதை தான் ஆல்கோ டிரேடிங் என்று அழைக்கப்படுகிறது, பத்திரங்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்வதற்கான ஒரு முறையாகும், இது வர்த்தகங்களைத் தானாகச் செயல்படுத்த கம்பியூட்டர் ப்ரோகிராம்-ஐ பயன்படுத்துகிறது. இந்த ப்ரோகிராம்-ல் விலை, நேரம் அல்லது அளவு போன்ற முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றி, மனிதர்களால் செய்ய முடியாத வேகத்திலும், துல்லியமாக்கவும் பங்குச்சந்தை ஆர்டர்களை புக் செய்ய உதவுகிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications