அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், அதானி குழுமம் குறித்து 106-பக்கங்கள் அறிக்கையில், 32,000 சொற்களும் மற்றும் 720 மேற்கோள்களை உள்ளடக்கிய அறிக்கையை ஜனவரி 2023ல் வெளியிட்டது. இந்த அறிக்கையில் the largest con in corporate history என்ற விமர்சனத்துடன் ஹிண்டன்பர்க் வெளியிட்டது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பெயரில் கடந்த 1.5 வருடமாக இத்துக்குறித்து செபி விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்திற்குச் செபி விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் அதானி பங்குகளின் நிலைமை என்ன..?

ஹிண்டன்பர்க் தனது இணையத்தில் செய்த பிளாக் பதிவில், "இந்த நோட்டீஸ், இந்தியாவில் உள்ள மிக சக்தி வாய்ந்த நபர்களால் செய்யப்படும் ஊழல் மற்றும் மோசடிகளை வெளிப்படுத்தும் முயற்சிகளை அழுத்தவும், மிரட்டுவதற்குமான செயல்" என்று குற்றம் சாட்டியுள்ளது.
ஜனவரி 2023 இல் வெளியிடப்பட்ட ஹிண்டன்பர்க் அறிக்கையில், அதானி குழுமம் வரி ஏய்ப்பு, செபி விதிமீறல், முறைகேடான நிதி பரிமாற்றம், பங்கு விலையை திட்டமிட்டு விதிகளை மீறி மறைமுகமாக உயர்த்துவது ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த அறிக்கையின் எதிரொலியாக அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு பல பில்லியன் டாலர் அளவில் சரிந்தது.
ஆனால் கடந்த 1.5 வருடத்தில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், அதானி குழும பங்குகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவது மூலம் சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் பழைய நிலைக்கே திரும்பியது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் அதானி - ஹிண்டன்பெர்க் விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் பங்கு விலை என்ன..?
அதானி எண்டர்பிரைசஸ் - 0.23 சதவீதம் உயர்வு
அதானி போர்ட்ஸ் - 0.64 சதவீதம் உயர்வு
அதானி பவர் - 1.11 சதவீதம் உயர்வு
அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் - 4.50 சதவீதம் உயர்வு
அதானி கிரீன் எனர்ஜி - 1.13 சதவீதம் உயர்வு
அதானி டோட்டல் கேஸ் - 4.01 சதவீதம் உயர்வு
அதானி வில்மார் - 1.95 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 2.35 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 0.46 சதவீதம் உயர்வு
NDTV - 3.38 சதவீதம் உயர்வு
இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு காலை முதல் மந்தமான வர்த்தகத்தையும் தொடர் சரிவையும் சந்தித்து வந்த நிலையில் 11.30 மணியளவில் 115.68 புள்ளிகள் உயர்ந்து 79,593.03 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 42.85 புள்ளிகள் உயர்ந்து 24,184.80 புள்ளிகளை எட்டியுள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications