இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEBI, அமெரிக்காவைச் சேர்ந்த ஜேன் ஸ்ட்ரீட் என்னும் பிரபல முதலீட்டு நிறுவனத்தை இந்திய சந்தையில் முதலீடு செய்வதையும், தலையிடுவதையும் தற்காலிகமாக தடை செய்துள்ளது. ஜேன் ஸ்ட்ரீட் குறித்து கடந்த மாதமே தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் விரிவாக செய்தி வெளியிட்டு இருந்து.
ஜேன் ஸ்ட்ரீட் தனது அதி திறன்மிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எப்படி இந்திய பங்குச்சந்தை முதலீடு செய்கிறது..? இதன் மூலம் இந்திய முதலீட்டாளர்கள் எப்படி பாதிக்கப்படுகின்றனர்..? ஜேன் ஸ்ட்ரீட்-ன் முதலீட்டில் நடக்கும் முறைகேடுகள் என்ன..? செபி ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனத்தை எந்த கோணத்தில் விசாரணை செய்து வருகிறது என்பது குறித்து தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் விவாதித்து இருந்தோம்.

இதை தொடர்ந்து செபி தற்போது ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனத்திற்கு மொத்தமாக செக் வைத்துள்ளது மட்டும் அல்லாமல் பெரும் தொகையை அபராதமாக விதித்துள்ளது. ஜேன் ஸ்ட்ரீட் கடந்த ஆண்டு இந்திய சந்தையில் செய்யப்பட்ட முதலீட்டிலும், வர்த்தகத்தின் வாயிலாக சுமார் 32,681 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளதாக செபி கணக்கிட்டுள்ளது.
SEBI-யின் தற்காலிக உத்தரவின்படி, ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் அதன் குழு நிறுவனங்கள் இந்திய பத்திரச் சந்தையை நுழைவதை தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த நிறுவனங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்குகளை வாங்குவது, விற்பனை செய்வது அல்லது பிற வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
SEBI-யின் ஆய்வின்படி, ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் இந்திய பங்குச் சந்தையில் BANKNIFTY குறியீட்டை சிக்கலான மற்றும் சட்டவிரோதமான முறையில் கையாண்டுள்ளது. இதன் மூலம் ஜேன் ஸ்ட்ரீட் சுமார் 4,843 கோடி ரூபாய் (570 மில்லியன் டாலர்) அளவிலான தொகையை சட்டவிரோத லாபத்தைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் மொத்த லாபம் 32,681 கோடி ரூபாயாக இருந்ததாக SEBI கணக்கிட்டுள்ளது, இதன் அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
SEBI கடந்த சில மாதங்களாக ஜேன் ஸ்ட்ரீட்-இன் வர்த்தக பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து வந்தது. சில சந்தை முதலீட்டாளர்களும், கண்காணிப்பாளர்களும், இந்த அமெரிக்க நிறுவனம் இந்திய சந்தையில் முறைகேடு செய்ததாக புகார் அளித்ததால் இந்த விசாரணை தொடங்கியது.
இந்நிறுவனம், நிஃப்டி-50 மற்றும் பேங்க் நிஃப்டி ஆப்ஷன்களில் பெரிய அளவிலான பொசிஷன்களை எடுத்து, சந்தை குறியீடுகளை 0.01% அளவுக்கு சரியை முக்கிய காரணமாக உள்ளது. இதனால் இந்த நிறுவனம் ஆர்பிட்ரேஜ் லாபம் பெறுவதாக செபி சந்தேகித்தது. செபி அமைப்பு பொதுவாக ரூ.1,000 கோடி தினசரி வர்த்தக வரம்பை எட்டும் நிறுவனங்களை கட்டம் கட்டி ஆய்வு செய்யும், இந்த வகையில் இந்நிறுவனம் அடிக்கடி மீறுவதாகவும் கூறப்படுகிறது.
ஜேன் ஸ்ட்ரீட் தில்லாங்கடி வேலை:
ஜேன் ஸ்ட்ரீட், அதிவேக அல்காரிதங்களைப் பயன்படுத்தி, நொடிகளில் கோடிக்கணக்கான வர்த்தகங்களை செய்கிறது. எடுத்துக்காட்டாக, நிஃப்டி-50 குறியீடு சிறிது உயரும் என ஆப்ஷன் சந்தையில் பெட்டிங் வைத்தால், இக்குறியீட்டில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை இந்த நிறுவனமே ரெகுலர் மார்க்கெட்டில் வாங்கி செயற்கையாக குறியீட்டை உயர்த்துகிறது. இந்த சிறு மாற்றம், அதிக லெவரேஜ் கொண்ட டெரிவேட்டிவ்ஸ் சந்தையில் பெரும் லாபத்தை அளிக்கிறது.
SEBI-யின் முதல்கட்ட ஆய்வில் ஜேன் ஸ்ட்ரீட், BANKNIFTY குறியீட்டில் முறையற்ற வகையில் முதலீடு செய்து, தனது பண பலத்தால் உயர்த்தியும், இறக்கியும் பெரும் லாபம் பெற முறைகேடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த விசாரணையின் இறுதி உத்தரவு, அடுத்த சில மாதங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளில் எந்தவொரு பண பரிவர்த்தனையும் SEBI-யின் அனுமதியின்றி மேற்கொள்ள கூடாது என்று வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியா, உலகின் மிகப்பெரிய டெரிவேட்டிவ்ஸ் சந்தையாக உள்ளது, இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் உயர் அலைவரிசை வர்த்தக (high-frequency trading) மற்றும் பங்குச்சந்தை நிறுவனங்கள் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளன.
குறிப்பாக, மார்ச் 2025-இல் முடிவடைந்த ஐந்து ஆண்டுகளில், சில்லறை முதலீட்டாளர்களின் (retail investor) புரட்சியால் ஆப்ஷன் பிரீமியங்கள் 11 மடங்கு அதிகரித்துள்ளன. இந்த சூழலில், ஜேன் ஸ்ட்ரீட்போன்ற நிறுவனங்கள் பெரும் லாபத்தைப் பெற்றிருந்தாலும், சந்தை ஒழுங்குமுறை மீறல்கள் கண்டறியப்பட்டதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், உலகளாவிய நிதி நிறுவனங்களின் இந்திய சந்தையில் செயல்பாடுகளை மறு பரிசீலனை செய்ய வைக்கலாம். ஜேன் ஸ்ட்ரீட்-இன் தடை, இதேபோல் மற்ற நிதி நிறுவனங்களும் சந்தை ஒழுங்குமுறை விதிகளை மதித்து நடக்க வேண்டிய அவசியத்தில் உள்ளது.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications