முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், பங்குச் சந்தையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் சந்தைக் கட்டுப்பாட்டாளரான செபி புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
புதிய விதிகளின்படி, இப்போது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள், சந்தையில் பரவும் செய்திகள் குறித்து உரிய நேரத்தில் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். இந்த செய்தி பொய்யானால் நிறுவனங்கள் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்று செபி கூறியுள்ளது.
சரியாக இருந்தால், அவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். வதந்திகள் குறித்து நிறுவனம் தனது விளக்கத்தையும் அளிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
இது தவிர, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளை வெளியிடுவதற்கான காலக்கெடு குறித்தும் கடுமையான விதிமுறைகளை செபி வகுத்துள்ளது. மார்ச் 29ஆம் தேதி செபி ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முதல் 100 நிறுவனங்களுக்கு புதிய விதி!
இந்த உத்தரவின்படி, மார்க்கெட் கேப் அடிப்படையில் முதல் 100 நிறுவனங்கள் அக்டோபர் 1, 2023 முதல் சந்தையில் பரவும் வதந்திகளை சரிபார்க்க, உறுதிப்படுத்த அல்லது மறுக்க அல்லது தெளிவுபடுத்த வேண்டும். இது மட்டுமின்றி, மார்க்கெட் கேப் படி முதல் 250 நிறுவனங்களுக்கு இந்த விதி ஏப்ரல் 1, 2024 முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது.
நிறுவனங்களின் இயக்குநர்கள், இணக்க அதிகாரி, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை நிதி அதிகாரி ஆகியோரின் காலியிடங்களை அவர்கள் வெளியேறிய தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என தெரிவித்துள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட்!
ப்ரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளின் ஸ்பான்சர்களாக மாற அனுமதிக்கும் ஒழுங்குமுறை கட்டமைப்பையும் செபி அங்கீகரித்துள்ளது. இது தவிர, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக (ESG) வெளிப்பாடுகளுக்கான விதிமுறைகளுக்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது.
பங்குதாரர்களுக்கு பாதுகாப்பு!
ஆரம்ப பொதுச் சலுகைகளில் (ஐபிஓ) மேற்கொள்ளப்படும் இரண்டாம் நிலை சந்தைப் பரிவர்த்தனைகளுக்கு நிதி-தடுப்பு வசதியை செபி அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்மூலம் முதலீட்டாளர்களின் பணத்தை பங்கு தரகர்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும், பங்கு தரகர்களின் மோசடி மற்றும் சந்தை துஷ்பிரயோகத்தைத் தடுக்க ஆணையம் ஒரு முறையான வழிமுறையை அமைக்கும் என தெரிவித்துள்ளது.
முதலீட்டாளர்களைப் பாதுகாக்க செயல்பாட்டு அபாயங்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிராக, அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் 500 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள அனைத்து புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கான அனைத்து யூனிட்களையும் டீமெட்டீரியலைஸ் செய்ய SEBI AIFகளை கட்டாயமாக்கியுள்ளது.
அதானி விவகாரம்!
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செபி வாரியத்தின் தலைவர் மாதாபி பூரி புச் இடம் அதானிக் குழும விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இது அதற்கான நேரம், இடம் இல்லை எனக் கூறியுள்ளார்.
மேலும் இச்சமயத்தில் ஒரு தனிப்பட்ட நிறுவனம் குறித்து கருத்து சொல்வது சரிபட்டு வராது எனவும், நிறுவனம் குறித்த விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றம் வெளியிடும் எனவும் மாதாபி பூரி புச் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications