பங்குச்சந்தை இன்பராஸ்டக்ச்சர் நிறுவனங்களான ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ப்ரோக்கிங் நிறுவனங்கள், க்ளியரிங் கார்ப்பரேஷன்கள் மற்றும் டெபாசிட்டரிகள் போன்ற நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் செய்யும் வர்த்தகத்திற்கு விதிக்கப்படும் கட்டணங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் மற்றும் தொகுதிகளின் அடிப்படையில் இருக்க கூடாது என்றும் செபி திங்கள்கிழமை அறிவித்தது.
பொதுவாக ப்ரோக்ரேஜ் நிறுவனங்கள் அதிக அளவிலான பரிவர்த்தனைகளை செய்யும் போது குறைந்த கட்டணத்தை வசூலிக்கின்றன, இது டெரிவேடிவ்கள் போன்ற பிரிவுகளில் வர்த்தகம் அதிகரிப்பதற்கு பங்களிக்கிறது. இதை சரி செய்யவே முதலீட்டாளர்கள் செய்யும் அனைத்து விதமான வர்த்தகத்திற்கும் ப்ரோகரேஜ் நிறுவனங்கள் ஒரே மாதிரியான கட்டணங்களை விதிக்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளது.

செபியின் இந்த உத்தரவின் எதிரொலியாக ப்ரோகரேஜ் நிறுவனங்களின் வருமானம் ரூ.2,000 கோடிக்கும் மேல் குறைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் இனி குறைந்த கட்டண மற்றும் இலவச ப்ரோகரேஜ் கட்டணங்கள் போன்ற கவர்ச்சி கரமான திட்டங்கள் பாதிக்கப்படும்.
செபி இந்த உத்தரவை திங்களன்று வெளியிட்டதைத் தொடர்ந்து, பல தரகு நிறுவனங்களின் பங்குகள் செவ்வாய்க்கிழமை கிட்டத்தட்ட 9 சதவீதம் வரை சரிந்தன. புதன்கிழமையும் இதன் தாக்கம் இருந்து வருகிறது.
அக்டோபர் 1 முதல், சந்தை கட்டமைப்பு நிறுவனங்கள் (MIIs) வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை அளவைப் (volume) கணக்கில்கொள்ளாமல் சீரான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று செபி உத்தரவிட்டுள்ளது. இதில் பங்குச் சந்தைகள், க்ளியரிங் கார்ப்பரேஷன்கள் மற்றும் டெபாசிட்டரிகள் போன்ற நிறுவனங்களும் அடங்கும்.
இதுக்குறித்து Zerodha நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நிதின் காமத் கூறுகையில், இனி இலவச ப்ரோகரேஜ் கட்டமைப்பைக் கைவிட வேண்டியிருக்கும் அல்லது எஃப் &ஓ (F&O) வர்த்தகத்திற்கு அதிக கட்டணத்தை வசூலிக்க வேண்டியிருக்கும் என தெரிவித்தார். செபி, நிதியமைச்சகம் கடந்த ஒரு மாதமாக F&O துறையில் முதலீட்டாளர்களின் பங்கீட்டை குறைக்கும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, இதில் பணத்தை இழக்கும் அபாயம் அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
செபியின் உத்தரவு தற்போது இலவச தரகர் திட்டங்களை கைவிடவோ அல்லது கட்டணங்களை உயர்த்தவோ ப்ரோகரேஜ் நிறுவனங்களைக் கட்டாயப்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications