இந்தியாவின் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, அதானி குழுமத்தில் முதலீடு செய்த மொரீஷியஸ் நாட்டை சேர்ந்த எலாரா இந்தியா ஆப்பர்ச்சுனிடீஸ் ஃபண்ட் மற்றும் வெஸ்பெரா ஃபண்ட் ஆகியவற்றுக்கு அபராதம் மற்றும் உரிமம் ரத்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதானி குழுமத்தின் பங்கு இருப்பு தொடர்பான செபியின் விசாரணை வருட கணக்கில் நடந்து வரும் வேளையில், தற்போது முக்கிய திருப்பமாக இரு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு செபி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் மீண்டும் அதானி குழும வழக்கு சூடுப்பிடித்துள்ளது.

2023-ல் ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அதானி நிறுவன பங்குகளின் மதிப்பு சரிந்து முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு மதிப்பை இழந்தனர். இத்தகைய சூழ்நிலையில் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை கையில் எடுத்து. இதை தொடர்ந்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து அதானி குழுமத்தின் மீது செபி விசாரணை நடத்த உத்தரவிட்டு பல வருடங்களாக செபி விசாரணை நடத்தி வருகிறது வருகிறது.
இந்க விசாரணையில் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள அனைத்து முதலீட்டு அமைப்புகள், பண்டுகள் தொடர்பான முழு விபரத்தையும் செபி சேகரித்து வருகிறது. இந்த நிலையில் மொரீஷியஸ் நாட்டை சேர்ந்த எலாரா இந்தியா ஆப்பர்ச்சுனிடீஸ் ஃபண்ட் மற்றும் வெஸ்பெரா ஃபண்ட் ஆகிய இரு ஃபண்டுகளும் இரண்டு ஆண்டுகளாக பங்குதாரர் விவரங்களை வழங்காததால்,செபியின் விசாரணை தடைபட்டுள்ளது.
அதானி குழுமம் ஹிண்டன்பெர்க் குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், செபியிடம் இவ்விரு பண்டுகளும் முறையாக நிதி ஆதாரத்தையும், அதன் உரிமையாளர்கள் விபரத்தையும் கொடுக்காத காரணத்தால் அதானி குழுமம் மிதான விசாரணை முழுமை பெறாமல் உள்ளது. இதேவேளையில் செபி இந்திய பங்குச் சந்தையில் வெளிப்படைத்தன்மையின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக 2023 ஆம் ஆண்டு முதல் விபரங்களுக்கான கோரிக்கைய விடுத்து வருகிறது.
செபியின் எச்சரிக்கை: செபி அமைப்பு மொரீஷியஸைச் சேர்ந்த எலாரா இந்தியா ஆப்பர்ச்சுனிடீஸ் ஃபண்ட் மற்றும் வெஸ்பெரா ஃபண்ட் ஆகியவற்றுக்கு, பங்குதாரர் விவரங்களை வழங்காததற்காக அபராதம் விதிக்கவும், அவற்றின் உரிமங்களை ரத்து செய்யவும் எச்சரித்துள்ளது என ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
மார்ச் 28, 2025 தேதி செபி வெளியிட்ட அறிக்கையின் படி, இந்த முதலீட்டு நிறுவனங்களிடம் 2023 முதல் "விரிவான பங்குதாரர் விவரங்களை" வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது, ஆனால் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இந்த தாமதம், அதானி குழுமத்தில் குறைந்தபட்ச பொதுப் பங்கு வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்த செபியின் விசாரணையை பாதித்துள்ளது என தெரிவித்துள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் சொன்னது என்ன..?: 2023-ல் ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை, அதானி குழுமம் வரி நாடுகளை தவறாகப் பயன்படுத்தியதாகவும், இந்தியாவின் குறைந்தபட்ச பொதுப் பங்கு விதிகளை மீறியதாகவும் குற்றம்சாட்டியது. இந்திய விதிகளின்படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் குறைந்தபட்சம் 25% பங்குகள் பொதுமக்களால் வைத்திருக்கப்பட வேண்டும்.
ஆனால், அதானி குழுமத்துடன் தொடர்புடைய சில வெளிநாட்டு நிதியங்கள் இந்த விதியை மீறி கௌதம் அதானி குடும்பமே தனது சொந்த பணத்தை மாற்று வழியில் சந்தையில் முதலீடு செய்து பங்கிற்கு டிமாண்டை கூட்டி விலையை உயர்த்தியுள்ளதாக ஹிண்டன்பர்க் கூறியது. இந்த குற்றச்சாட்டுகள், அதானி குழுமத்தின் பங்கு விலைகளில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தின, ஆனால் குழுமம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, பங்கு விலைகள் மீண்டும் உயர்ந்தன.
மொரீஷியஸ் முதலீடு நிறுவனங்களுக்கு என்ன தொடர்பு?: எலாரா இந்தியா ஆப்பர்ச்சுனிடீஸ் ஃபண்ட் மற்றும் வெஸ்பெரா ஃபண்ட் ஆகியவை, அதானி குழும நிறுவனங்களில் கணிசமான பங்குகளை வைத்திருப்பதாக செபி கண்டறிந்தது. இந்த முதலீட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களாக (FPIs), தங்கள் பங்குதாரர்களின் விரிவான விவரங்களை வழங்க வேண்டும் என்று செபி 2023 முதல் கோரியது. ஆனால், இந்த நிதியங்கள் விவரங்களை வழங்கவோ அல்லது தாமதத்திற்கு காரணங்களை விளக்கவோ இல்லை. இதனால், செபியின் விசாரணை முடங்கியது.
அதானி தரப்பில் விளக்கம்: ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அதானி குழுமம் தனது 13 வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து, எந்தவித தவறும் செய்யவில்லை என மறுத்தது. குற்றச்சாட்டுகளால் ஏற்பட்ட பங்கு விலை வீழ்ச்சிக்குப் பிறகு, அதானி குழுமத்தின் பங்குகள் மீண்டும் உயர்ந்துள்ளன. இருப்பினும், செபியின் தற்போதைய எச்சரிக்கை, இந்த விவகாரத்தை மீண்டும் சூடுப்பிடிக்க செய்துள்ளது.
செபியின் அடுத்த ஆக்ஷன் என்ன?: செபி, எலாரா மற்றும் வெஸ்பெரா நிதியங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கவோ அல்லது உரிமங்களை ரத்து செய்யவோ தயாராக உள்ளது. இந்த விவகாரம், அதானி குழுமத்தின் மீதான முதலீட்டாளர் நம்பிக்கையை பாதிக்கலாம், இருப்பினும் குழுமம் தற்போது பங்கு மீட்சியை அடைந்துள்ளது. செபியின் விசாரணை முடிவுகள் முக்கியமானதாக இருக்கும்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications