நிதி ஆலோசகர்களுடனான இணைப்பு கட்டுப்பாடு ()
இந்திய டிஜிட்டல் மயமான வாழ்க்கையில் மக்களை பல வகையில் மோசடி செய்து வருகின்றனர். முன்பெல்லாம் பிரபலங்கள் ஒரு பொருளை வாங்க சொல்லி விளம்பரம் செய்வார்கள், ஆனால் இப்போது முதலிட்டு திட்டத்தில் முதலீடு செய்ய சொல்லி பிரபலங்கள் விளம்பரம் செய்வது அதிகரித்துள்ளது.
இத்ததைய முதலீட்டு திட்டங்கள், பங்குகள் குறித்து முழுமையாக தெரியாமல் வெறும் விளம்பர காசுக்காக பிரபலங்கள் இதுப்போன்ற விளம்பரங்களில் ஈடுப்படுகின்றனர். இதை நம்பி பல கோடி மக்கள் இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் ஏமாந்து தங்களுடைய சேமிப்பை இழந்து வருகின்றனர்.

இத்தகைய மோசடிகளை தடுக்கும் வண்ணம் செபி கடுமையான விதிமுறையை கொண்டு வந்துள்ளது. பொதுவாக பொருட்கள்களையோ அல்லது சேவைகளையோ விளம்பரப்படுத்தினால் அவர்கள் influencers, இதுவே நிதி சேவை திட்டங்களையும், முதலீட்டு திட்டங்களையும் விளம்பரப்படுத்தினால் அவர்கள் பெயர் FinFluencers.
இந்த நிலையில் இந்தியாவில் முதலீட்டாளர்களைக் குழப்பும் அல்லது ஏமாற்றும் தவறான தகவல்களைத் தடுக்கும் நோக்கில், நிதி ஆலோசகர்கள் (FinFluencers) மூலம் பரப்படும் தவறான தகவல்களை ஒழுங்குபடுத்த, பங்குச்சந்தை கட்டுப்பாடு ஆணையமான செபி புதிய விதிமுறைகளை வியாழக்கிழமை அன்று அறிவித்துள்ளது.
விதிமுறைகளின் விளக்கம்:
செபி ஒழுங்குபடுத்தும் நிறுவனங்கள் (மியூச்சுவல் ஃபண்டுகள், பங்கு தரகர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர்கள்), செபி அமைப்பில பதிவு செய்யப்படாத நபர்களுடன் (FinFluencers) எந்தவித தொடர்பையும் கொண்டிருக்க கூடாது என்ற விதிமுறையை கொண்டு வந்துள்ளது.
இதோடு செபி ஒழுங்குபடுத்தும் நிறுவனங்கள் மற்றும் FinFluencers மத்தியில் பணம் அல்லது பண மதிப்பு தொடர்பான பரிவர்த்தனை, வாடிக்கையாளர் பரிந்துரை, தகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் இணைப்பு அல்லது இதே போன்ற தன்மை கொண்ட வேறு எந்த தொடர்பும் இருக்க கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதேவேளையில் செபி சில முக்கியமான விஷயங்களுக்கு விதிவிலக்கும் அளித்துள்ளது. அதாவது செபி அமைப்பால் ஒழுங்குபடுத்தும் நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு கல்வி அறிவு வழங்குவதற்காக பதிவு செய்யப்படாத FinFluencers உடந் இணைந்து செயல்பட முடியும். ஆனால், இத்தகைய கூட்டணி முயற்சியில் எந்தவிதமான பரிந்துரைகளையும் வழங்கவோ அல்லது எந்த லாபத்தையும் உத்தரவாதம் செய்யவோ கூடாது என்றும் அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் மூலம், முதலீட்டாளர்கள் தவறான தகவல்களால் வழிநடத்தப்படுவதையும், பொய்யான வாக்குறுதி கொடுத்து நிதி இழப்புகள் ஏற்படுத்துவதை தடுக்கிறது.
இதேபோல் இந்த புதிய விதிமுறை மூலம் யூடியூப், இன்ஸ்டாவில் பிரபலமானவர்களை வைத்து தவறான தகவல்களை பரப்பி ஆதாயம் அடையும் நிலை குறைக்கும். மேலும் இனி பதிவு செய்யப்பட்ட நிதி ஆலோசகர்கள் மட்டுமே முதலீட்டு ஆலோசனை வழங்க தகுதி பெற்றவர்கள் என்பதை இந்த விதிமுறை உறுதி செய்கிறது.
எப்போதும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும் போது நிதி ஆலோசகர்களின் (FinFluencers) பரிந்துரைகளை மட்டும் நம்பி முதலீடு செய்ய வேண்டாம். உங்கள் நிதி நிலை மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப முதலீட்டு முடிவுகளை எடுங்கள். இதேபோல் முதலீடு செய்யும் முன்பு சொந்தமாக சில ஆய்வுகளையும், கள நிலவரத்தையும் தெரிந்துக்கொண்டு முதலீடு செய்யுங்கள்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications