கொரோனா 2வது அலை நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும்: மத்திய நிதியமைச்சகம்

இந்தியாவில் தற்போது ஏற்பட்டு உள்ள கொரோனா 2வது அலை மூலம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால் 2022ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என நிதியமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார மறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இதே அறிக்கையில் நிதியமைச்சகம் "muted economic impact" தான் இருக்கும் எனவும், முதல் அலையை விடவும் 2வது அலையில் நாட்டின் பொருளாதாரப் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என மத்திய அரசு எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளது.

 நாடு தழுவிய லாக்டவுன்

நாடு தழுவிய லாக்டவுன்

2020-21ஆம் நிதியாண்டில் கொரோனா தொற்றுக் காரணமாக மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய லாக்டவுன் மூலம் ஜூன் மாதம் நாட்டின் ஜடிபி 23.9 சதவீத வரையில் சரிந்தது. ஆனால் இதன் பின்பு அறிவிக்கப்பட்ட லாக்டவுன் தளர்வுகள் மூலம் அடுத்த 2 காலாண்டுகள் வளர்ச்சி பாதையில் இருந்தது. இதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கும் திரும்பியுள்ளதாகக் கூறப்பட்டது.

 இந்தியாவில் ஜிடிபி

இந்தியாவில் ஜிடிபி

ஜூன் காலாண்டில் -23.9 சதவீத சரிவில் இருந்து ஜிடிபி செப்டம்பர் காலாண்டில் -7.5 சதவீதமாகவும், டிசம்பர் காலாண்டில் 0.4 சதவீதமாகவும் உயர்ந்தது. இதைத் தொடர்ந்து மார்ச் காலாண்டில் கொரோனா 2வது அலை குறைந்த காலகட்டத்தில் மிகவும் மோசமான நிலையை அடைந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி மீண்டும் குறைந்துள்ளதாகக் கணிக்கப்பட்டு உள்ளது.

 கொரோனா 2வது அலை

கொரோனா 2வது அலை

மேலும் கொரோனா 2வது அலையில் தொற்று மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கை முதல் அலையை விடவும் 3 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால் வால் ஸ்ட்ரீட் தரகு நிறுவனமான கோல்டு மேன் சாச்சீஸ் 2022 நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி அளவீட்டை 11.1 சதவீதமாகக் குறைத்துள்ளது.

 விவசாயத் துறை

விவசாயத் துறை

இந்தக் கொரோரனா காலத்தில் விவசாயத் துறை மட்டுமே எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து உற்பத்தி, விற்பனை என அனைத்திலும் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல் நாட்டில் பருவமழை போதுமானதாக இருக்கும் காரணத்தால் விவசாயத் துறை நாட்டின் பொருளாதாரத்தையும் வர்த்தகத்தையும் தாங்கி பிடித்துக்கொண்டு இருக்கிறது.

 இதுதான் காரணமாக விளங்குகிறது.

இதுதான் காரணமாக விளங்குகிறது.

இந்தியாவில் முறையான கொரோனா தடுப்பு மருந்து அளிக்கப்படாமலும், போதுமான மருத்துவத் தளங்கள் உருவாக்காமல் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அதிகளவில் தளர்வு அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 2வது அலையை இந்தியாவில் எதிர்கொள்ள முடியவில்லை. இதன் வாயிலாகவே முதல் அலையை விடவும் மோசமான நிலையில் 2வது அலையில் மக்களை அதிகளவில் பாதித்துள்ளது. இந்நிலையில் 3வது அலை கட்டாயம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+