பீதியில் டிரம்ப்.. அடித்துபிடித்து கேட்ரிங் வண்டியில் ஏறிப்போன சம்பவம்.. துருக்கியில் நடந்தது என்ன? - வீடியோ

மாதத்தில் துருக்கி நாட்டில் NATO அமைப்பின் உயர்மட்ட கூட்டம் நடந்தது. இதேவேளையில் தான் ஈரான் மற்றும் பல்வேறு ஈரான் ஆதரவு அமைப்புகள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ கொலை செய்ய திட்டமிட்டுவதாக இஸ்ரேல் உட்பட பல தரப்பில் இருந்து சிஐஏ-வுக்கு தகவல் வந்தது.

இந்த பரபரப்பான காலக்கட்டத்தில் டிரம்ப் துருக்கி நாட்டின் Ankara பகுதியில் நடந்த NATO கூட்டத்திற்கு கலந்துக்கொள்வதற்காக வந்தார். இந்த பயணத்தில் தான் டிரம்ப் உயிருக்கு உச்சக்கட்ட ஆபத்து என தகவல் வந்த நிலையில் அடித்துபிடித்து கேட்ரிங் வண்டியில் ஏறிப்போய் மாற்று விமானத்தின் மூலம் அமெரிக்காவுக்கு உயிருடன் தப்பி சென்ற சம்பவம் நடந்தது.

 பீதியில் டிரம்ப்.. அடித்துபிடித்து கேட்ரிங் வண்டியில் ஏறிப்போன சம்பவம்.. துருக்கியில் நடந்தது என்ன? - வீடியோ

சமீபத்தில் டிரம்ப் தனது விமானத்தை மாற்றியது குறித்து பெரும் சர்ச்சை வெடித்த நிலையில், இதற்கான மூல காரணம் இந்த துருக்கி பயணம் தான் என தெரிய வந்துள்ளது. டிரம்ப துருக்கி நாட்டிற்கு கத்தார் அமெரிக்க அரசுக்கு அன்பளிப்பாக கொடுத்த போயிங் 747-8 விமானத்தில் வந்து இறங்கினார். இதை தொடர்ந்து செல்லும் போது ஏர் போர்ஸ் ஓன் விமானத்தில் சென்றார்.

இதற்கு மத்தியில் தான் மறைமுகமாக ஒரு சம்பவம் நடந்தது, உண்மையில் டிரம்ப் Air Force One விமானத்திலேயே போகவில்லை என்பது தான் உண்மை.

Also Read

டிரம்ப் துருக்கியில் இருக்கும் போது அவரை கொலை செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியானது, இதை தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்பு படைகள் உயர் அதிகாரிகளுக்கு கூட தெரியாமல் டிரம்ப்-ஐ பாதுகாப்பாக மிகவும் ரகசியமான மீட்கும் திட்டத்தை தீட்டியது.

முதலில் கத்தார் கொடுத்த போயிங் விமானத்தில் துருக்கி வந்த டிரம்ப், திரும்பி செல்லும் போது Air Force One விமானத்தில் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் டிரம்ப் ஏர்போர்ட் கேட்டரிங் அதாவது விமான பயணிகளுக்கு உணவு கொண்டு வரும் வாகனத்தில் ஏறி மிகவும் ரகசியமாக Air Force C-32A ரக சிறிய விமானத்தில் அமெரிக்கா சென்றுள்ளார்.

இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த கேட்டரி வாகனத்தின் பின்புற பெட்டி விமானத்தின் கதவின் உயரம் வரையில் செல்லும் அமைப்பை கொண்டது.

இதனால் டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து வெளியே வந்தது யாராலும் பார்க்க முடியவில்லை. ஆனால் கேட்டரி வாகனம் வந்து சென்றது மட்டும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

மேலும் டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் வெள்ளை மாளிகை அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் என மற்ற அதிகாரிகள் எவ்விதமான சந்தேகமும் வர கூடாது என்பதற்காக பயணித்துள்ளனர். டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இல்லாதது அமெரிக்காவில் விமானம் தரையிறங்கும் வரையில் அந்த விமானத்தில் இருந்தவர்களுக்கே தெரியாது என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. மேலும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருக்கும் அனைத்து பயணிகளுக்கும் விமானத்தில் ஜன்னல்களை மூடி வைக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.

Recommended For You

டிரம்ப் கேட்டரிங் வண்டியில் சென்ற வீடியோ சில முக்கிய தொலைக்காட்சிகளின் பத்திரிக்கையாளர்களின் கேமராவில் பதிவாகியுள்ளது என தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. துருக்கியில் பழைய போயிங் விமானத்தை மாற்றியது குறித்து வெள்ளை மாளிகை பாதுகாப்பு காரணமாக மாற்றயது எனவ விளக்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+