இந்தியா தனக்கு தேவையான 90 சதவீத கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. 60 சதவீத எல்பிஜி வெளிநாடுகளில் இருந்து தான் கொள்முதல் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் அன்றாட எரிபொருள் தேவைக்கு பெரும்பாலும் நாம் வெளிநாடுகளை தான் சார்ந்து இருக்கிறோம், அதிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளை தான் சார்ந்து இருக்கிறோம்.
வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு கப்பல் வழியாக இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகின்றன. தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் இவற்றை கொள்முதல் செய்து மக்களுக்கு வினியோகம் செய்கின்றன. இந்த நடைமுறைதான் தற்போது ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு அந்த வழியாக இந்தியாவிற்கு அன்றாடம் வரவேண்டிய கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி வரவில்லை.

இதனால் இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கிறது. உணவகங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன, வீட்டு உபயோக பயன்பாட்டுக்கு சிலிண்டர் முன்பதிவு செய்தும் கிடைக்கவில்லை என ஆங்காங்கே மக்கள் தவிப்பில் ஆழ்ந்திருக்கின்றனர். மற்றொருபுறம் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் குவிவதை காண முடிகிறது.
இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நிலைமை இன்னும் மோசம். ஆனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் கட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை என தொடர்ச்சியாக மத்திய அரசு கூறி வருகிறது இதற்கு காரணம் தென்னிந்திய மாநிலங்கள் தான். இந்தியாவில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எடுத்த முக்கியமான முடிவு பெரும் காரணம்.
90களில் நடந்த வளைகுடா போர் மற்றும் 2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் நடந்த அமெரிக்க தாலிபன் போர் சூழலில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்து இந்தியாவில் கடும் கட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க 2004 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் இந்தியன் ஸ்ட்ரடஜிக் பெட்ரோலியம் ரிசர்ச் லிமிடெட் என்ற ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் ஆந்திராவின் விசாகப்பட்டினம், கர்நாடகாவின் மங்களூர் மற்றும் பாடூர் ஆகிய இடங்களில் நிலத்தடியில் பாறைகளை குடைந்து பிரம்மாண்ட சேமிப்பு கிடங்குகளை அமைத்தது.

இந்த சேமிப்பு கிடங்குகளில் 5.3 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் எடுத்து பயன்படுத்தினால் கூட கிட்டத்தட்ட 10 நாட்கள் வரை ஒட்டுமொத்த நாட்டின் எண்ணெய் தேவையையும் பூர்த்தி செய்யும் திறன் கொண்டதாம். எப்போதெல்லாம் கச்சா எண்ணெய் விலை குறைவாக கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அதிக அளவில் எண்ணெய் வாங்கி இந்த கிடங்குகளில் சேமித்து வைத்துக் கொள்வார்கள்.

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் கர்நாடக மாநில மங்களூர் மற்றும் படூர் ஆகிய மூன்று இடங்களிலும் இந்த எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் பல லட்சம் டன்களுக்குகு கச்சா எண்ணெய் சேமித்து வைத்திருக்கின்றன. இந்த மூன்று கிடங்கிலும் 5.3 மில்லியன் மெட்ரிக் டன்கள் அதாவது 40 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் சேமிக்க முடியும். பூமிக்கடியில் இருக்கக்கூடிய இந்த எண்ணெய் சேமிப்பு கிடங்குகளின் மற்றொரு பெருமையே எந்த ஒரு தாக்குதலிலும் இது பாதிக்கப்படாது என்பதுதான்.
இயற்கை பேரிடர்கள் , வெடிகுண்டு வீச்சு என அனைத்திலிருந்தும் தற்காத்துக் கொள்ளக்கூடிய வகையில் மத்திய அரசு சாமர்த்தியமாக திட்டமிட்டு இந்த எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை கட்டமைத்து இருக்கிறது. பூமியில் பல கிலோமீட்டர் தொலைவிற்கு குழி தோண்டி பாறைகளுக்கு நடுவே கச்சா எண்ணெய் சேமித்து வைத்திருப்பதால் இதிலிருந்து தீ விபத்து ஏற்படும் அபாயமும் இல்லை எண்ணெய் கசிந்து வெளியேறும் பிரச்சனையும் இல்லை.
அரசினை பொறுத்தவரை வெளிநாட்டிலிருந்து ஒரு லிட்டர் எண்ணெய் கூட நமக்கு வரவில்லை, உள்நாட்டில் நிறுவனங்கள் வசம் இருக்கக்கூடிய கச்சா எண்ணெயும் முற்றிலுமாக தீர்ந்துவிட்டது என்ற மிக சவாலான சூழல் வரும் போது தான் இந்த இருப்பில் இருக்கக்கூடிய கச்சா எண்ணெய் எடுத்து பயன்படுத்தும்.
தற்போதைக்கு எண்ணெய் நிறுவனங்கள் வசம் கச்சா எண்ணெய் இருப்பு இருக்கிறது. ரஷ்யா, வெனிசுலா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வந்து கொண்டிருக்கிறது, ஹார்முஸ் ஜலசந்தியிலும் இந்திய கப்பல்களை அனுமதிக்க ஈரான் ஒப்புதல் தந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசலை பொறுத்தவரை பிரச்சினை இல்லை.
இனி அரசு எல்பிஜிக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளியுள்ளது. எனவே கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்கினை போலவே எல்பிஜி சேமிப்பு கிடங்குகளையும் அமைக்க அரசு முன்னுரிமை தரும் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டங்களை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications