சென்னை: வீட்டில் குழந்தை பிறந்த உடனே பலரும் அவற்றின் எதிர்காலம் குறித்து சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர். சிலர் அதற்காக முதலீட்டு திட்டங்கள் குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். பெண் குழந்தைகளுக்கு என்றால் பொன்மகள் சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளுக்கு என்றால் பொன்மகன் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்கள் உள்ளன. அந்த வரிசையில் தான் இந்த பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம் போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்கலாம், எங்கு சென்று விண்ணப்பிப்பது, எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும் போன்ற விவரங்களைப் பார்ப்போம்.
தபால் நிலையங்கள் எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது. என்னதான் தற்போது மக்கள் அனைவரும் UPI பேமெண்ட் தளங்களைப் பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்தாலும், ஒரு காலத்தில் தீபாவளிக்கும், பொங்கலுக்கும் உறவினர்களிடமிருந்து வரும் மணி ஆர்டர்களைப் பெறுவதே, ஒரு சந்தோசம் தான். அப்படிப்பட்ட தபால் நிலையம் தற்போது மக்களுக்கு உதவும் வகையில் முதலீட்டு திட்டங்கள் மற்றும் நிதி மேம்பாட்டிற்கு உதவிகரமாக மாறி உள்ளது.

பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம் என்பது குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகும். இதன் மூலம் குறைந்தபட்ச தொகையாக ரூ. 6 ரூபாய் முதல் தினமும் நீங்கள் டெபாசிட் செய்ய வேண்டும். உங்கள் குழந்தை எதிர்பாராத விதமாக இறந்து போகும் பட்சத்தில் ரூ.1 லட்ச ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையை இத்திட்டத்தின் மூலம் பெற முடியும்.
இந்தத் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?: இத்திட்டத்திற்கு 8 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளின் பெயரில் விண்ணப்பிக்கலாம். Bal Jeevan Bima திட்டத்தின் மூலம் அந்த குழந்தையின் 18ஆம் அகவை வரை தான், நீங்கள் பயனடைய முடியும். 18 வயதை கடந்த பின்பு, உங்கள் குழந்தை எதிர்பாராத விதமாக உயிரிழந்தால், இத்திட்டம் செல்லுபடி ஆகாது. உங்களுக்கு எந்த வித காப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட மாட்டாது.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?: குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் யார் வேண்டுமானாலும் அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு சென்று பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ரூரல் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் (Rural Postal Life Insurance), போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் (Postal Life Insurance) என்று இரு தனித்தனி திட்டங்களில் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் நீங்கள் ரூ. 3 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை பெறலாம்.
உங்கள் குழந்தை எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருந்தால், 20 வயதிற்கு மேல் இருந்து, நீங்கள் ரூரல் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பாலிசி எடுத்திருந்தால், உங்கள் முதலீட்டுத் தொகையில் ரூ. 1,000 ரூபாய்க்கு, வருடத்திற்கு ரூ. 48 ரூபாய் போனஸாக வழங்கப்படும். அதேபோல, நீங்கள் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பாலிசி எடுத்திருந்தால், உங்கள் முதலீட்டுத் தொகையில் ரூ. 1,000 ரூபாய்க்கு, ரூ. 52 ரூபாய் போனஸ் வழங்கப்படும். இந்தத் தொகையை நீங்கள், முதிர்வு காலத்தின் போது மொத்தமாக பெற்றுக் கொள்ளலாம்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications